Anthagan: தி அந்தகன் ஆன்தம் பாடலை.. வெளியிட்டார் நடிகர் விஜய்.. பிரஷாந்த் மகிழ்ச்சி!

Jul 24, 2024,04:38 PM IST
சென்னை: பிரஷாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் முதல் பாடலை   நடிகரும், த.வெ.க தலைவருமான விஜய்  இன்று வெளியிட்டுள்ளார்.

பிரஷாந்த்  சில ஆண்டுகளாக  தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தார். தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தார். இந்த நிலையில், நீண்ட இடைவேளைக்கு பிறகு, பிரபுதேவா, பிரஷாந்த், விஜய் ஆகிய மூவரும் இணைந்து நடித்துள்ள படம் தான் தி கோட். தி கோட் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது இறுதி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் செப்டம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.



நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரஷாந்த்  ஹீரோவாக நடித்து இருக்கும் படம் தான் அந்தகன். கடந்த 2018ல் பூஜையுடன் தொடங்கப்பட்ட  அந்தகன், வெளி வராமல் நிலையில் இருந்தது. தற்போது இத்திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்தியில் பெரும் வரவேற்பை பெற்ற அந்தாதூன் படத்தை தமிழில் ரீமேக் செய்துள்ளார் இப்படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆன  பிரஷாந்த்தின் தந்தை தியாகராஜன். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக ரவியாதவ், கலை இயக்குநராக செந்தில் ராகவன் ஆகியோர் பணிபுரிந்துள்ளானர்.

இதில் ஆயுஷ்மான் குராணா கதாபாத்திரத்தில் பிரஷாந்த்  நடித்துள்ளார். நாயகியாக ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், செம்மலர், பூவையார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளிவரும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் குறித்து பிரஷாந்த் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஏற்கனவே கோட் படத்தில் பிரஷாந்த்துக்கு முக்கியமான பாத்திரம் என்று பேச்சு அடிபடுகிறது. தற்போது அந்தகனும் வருவதால் ரசிகர்களுக்கு டபுள் டிலைட்டாக இது அமைந்துள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான அந்தகன் ஆந்தம் பாடலை இன்று நடிகர் விஜய்யும், பிரபுதேவாவும் சேர்ந்து வெளியிட்டுள்ளார்கள். இப்பாடலுக்கான வரிகளை உமாதேவி எழுதியுள்ளார். சான்டி  மாஸ்டர் நடனம் கற்பித்துள்ளார். பாடலை அனிருத் மற்றும் மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவா இந்தப் பாடலை வடிமைத்து இயக்கியுள்ளார். இன்று ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் மட்டுமின்றி பத்திரிகையாளர்களுக்கு என்று சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் அந்தகன் படத்தின் திரையிடலும் நடந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்