சென்னை: ஹேமா கமிஷன் அறிக்கை குறித்து தன்னிடம் யாரும் கேள்வி எழுப்பாதீர்கள் என நடிகை ஆண்ட்ரியா ஆவேசமாக பேசியுள்ளார்.
ஹேமா கமிஷனால் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்து மலையாளத் திரையுலகையே புரட்டிப்போட்டு விட்டது. இந்த அறிக்கையில் பல்வேறு நடிகர்களும் இயக்குனர்களும் சிக்கி வருவது பலரை அதிர்ச்சி அடைய வைத்தது. இதனைத் தொடர்ந்து Amma- தலைவர் பதவியிலிருந்து இருந்து நடிகர் மோகன் நான் பதவி விலகி இருப்பது நினைவிருக்கலாம். இந்த ஹேமா கமிஷன் மலையாள சினிமாவில் மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவிலும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தித்தியது.

இது குறித்து பல்வேறு பிரபலங்களிடம் கேள்வி எழுப்பப்பட்ட வந்தது. ஆனால் இதற்குப் பதில் அளிக்காமல் பலரும் கழுவுற மீனில் நழுவுற மீன்களாக இருந்து வருகின்றனர். அந்த வரிசையில் ஏற்கனவே ரஜினிகாந்த், ஜீவா, கார்த்தி, ஆகியோரிடம் விவாதிக்கப்பட்டது. ஆனால் அவர்கள் பதில் அளிக்காமல் மௌனமாகவே இருந்து வருகின்றனர். ரஜினிகாந்த் எனக்குத் தெரியாது என்று கூறி விட்டார். ஜீவா கோபாவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நடிகை ராதிகா மட்டுமே பகிரங்கமாக இதுகுறித்து விவாதித்து வருகிறார். பல்வேறு கோரிக்கைகளையும் தொடர்ந்து அவர் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று சென்னை திருவான்மியூர், வால்மீகி நகரில் பெண்களுக்கான உள்ளாடை உலகம் ஷீக் ரேட்ஸ் (Shecratas) கடை திறப்பு விழா நடைபெற்றது.இதில் கலந்துகொண்ட நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியா ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். இந்தக் கடை பெண்களுக்கான அனைத்து விதமான பிராண்டுகளின் உள்ளாடைகளும் கிடைக்கும் அளவில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது கடை திறப்பு விழாவில் ஆண்ட்ரியா கூறியதாவது:
.jpg)
நான் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் ஒரு பெண்ணாக மகிழ்ச்சி அடைகிறேன்.இதை வடிவமைத்திருப்பது ஒரு ஆண் என்பதில் மகிழ்ச்சி. இது மாறிவரும் இந்த உலகத்தில் அனைவருக்கும் தேவையான ஒன்று. இது நமது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் தேவைப்படும் ஒன்று.இது பெண்களுக்கானது மட்டுமல்ல அனைவருக்குமானது.ஆண்கள் தங்கள் உறவினர்களுக்கு, பெண் நண்பர்களுக்கு இதை பரிந்துரைக்கலாம் என பேசினார்.
இதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவிடம் ஹேமா கமிஷன் பற்றியும், பெண்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்டு இருப்பதை பற்றி ஒரு நிரூபர் கேள்வி எழுப்பினார் .அதற்கு அதைப்பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இளமையே....எதைக் கொண்டு அளவிடலாம் உன்னை?
வைக்கதஷ்டமி திருவிழா.. வைக்கம் மகாதேவர் கோவில் சிறப்புகள்.. இன்னும் தெரிஞ்சுக்கலாம் வாங்க!
டிசம்பர் 15ம் தேதி சென்னை வருகிறார் மத்திய அமைச்சர் அமித்ஷா
முன்னாள் மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்
தோசையம்மா தோசை.. ஹெல்த்தியான தோசை.. சுட்டுச் சுட்டுச் சாப்பிடுங்க.. சூப்பராக வாழுங்க!
அரங்கன் யாவுமே அறிந்தவனே!
அவரது நடிப்பாற்றல் பல தலைமுறைகளைக் கவர்ந்துள்ளது: ரஜினிகாந்திற்கு பிரதமர் மோடி, முதல்வர் வாழ்த்து
தங்கம் விலையில் அதிரடி... இன்று மட்டும் சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு... புதிய உச்சத்தில் வெள்ளி விலை!
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு... அதிகாலையில் பனிமூட்டமும் இருக்குமாம் - IMD
{{comments.comment}}