சென்னை: நடிகை மேகா ஆகாஷ் தனது ஆசை நிறைவேறி விட்டதாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டு நிச்சயதார்த்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் 2019 ஆம் ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தின் மூலம் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். இதனைத் தொடர்ந்து வந்தா ராஜாவா தான் வருவேன் என்ற படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாகவும், என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் தனுசுக்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இப்படங்கள் மூலம் மேகா ஆகாஷ் பிரபலமாக அறியப்பட்டார்.
பின்னர் சபாநாயகன், வடக்கம்பட்டி ராமசாமி, மழை பிடிக்காத மனிதன் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர தெலுங்கில் டியர் மேகா, ராஜ ராஜ சோரா, பிரேமசேசா, ராவணசுரா போன்ற படங்களிலும், ஹிந்தியில் சேட்டிலைட் சங்கர் போன்ற படங்களிலும் நடித்தவர். தற்போது யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன .
இந்த நிலையில் நடிகை மேகா ஆகாசுக்கும், அவரது நீண்ட நாள் காதலன் சாய் விஷ்ணு என்பவருடன் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தனது ஆசை நிறைவேறியதாக பதிவிட்டுள்ளார். ஆனால் எப்போது திருமணம் என்ற தகவல் இதுவரை வெளிவரவில்லை. மேகாவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}