சென்னை: கடந்த சில மாதங்களாகவே எமோஷனலாகவும், தனிப்பட்ட முறையிலும் பல சவால்களை சந்தித்து வருவதால் எதிலும் பங்கு கொள்ள முடியவில்லை. கடினமான பயணம் என்றாலும் கூட விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
தமிழில் ராஜா ராணி, வாயை மூடி பேசவும், நையாண்டி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தாலும், தனிக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்து வந்தார். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீண்டும் மலையாளத்தில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். கடந்த வருடம் வெளியான சூட்சும தர்ஷினி திரைப்படம் நஸ்ரியாவிற்கு மிகப்பெரிய வெற்றியை தந்தது.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நஸ்ரியா கடந்த நான்கு மாதங்களாகவே அமைதியாக இருந்தார். இந்த நிலையில், தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், நான் எப்போதுமே ஆக்டிவாக இருப்பவள். கடந்த சில மாதங்களாக மன ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் தனிப்பட்ட சவால்களுடன் நான் போராடி வருகிறேன். அதற்கான சிகிச்சைகளையும் எடுத்துக் கொண்டு போராடி வருகின்றேன். தற்பொழுது அதில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறேன். இன்னும் சில நாட்களில் அதிலிருந்து முழுமையாக குணமடைந்து விடுவேன்.
இந்த இடைப்பட்ட காலத்தில் என்னுடைய 30 வது பிறந்தநாள், புது வருடம், சூட்சும தர்ஷினி படத்தின் வெற்றி விழா என எந்த நிகழ்விலும் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அதுமட்டுமல்ல என்னுடைய நண்பர்களுக்கும் எனக்கு என்ன ஆனது என்று விவரித்தும் சொல்லவில்லை. அவர்களுடைய தொலைபேசி அழைப்புகளையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என்னால் யாருக்குகேனும் அசவுகரியம் ஏற்பட்டிருந்தால் என்னுடய வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.
என்னை தங்களது படங்களில் நடிக்க வைக்க தொடர்பு கொண்டு முடியாமல் போனவர்களிடமும் என்னுடைய மன்னிப்பை கேட்டுக்கொள்கிறேன். சூட்சும தர்ஷினி படத்தில் எனக்கு சிறந்து நடிகைக்கான கேரள திரைப்பட கிரிட்டிக் விருது கிடைத்துள்ளதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த கடினமான பயணத்தில் நாளுக்கு நாள் குணமடைந்து வருகிறேன். முழுமையாக மீள இன்னும் சில நாள்கள் ஆகலாம். மீண்டு வருவதற்கு பாதை இருக்கிறது என்பதை உறுதி செய்கிறேன். உங்களின் எல்லையில்லா அன்பிற்கு நன்றி. விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.
சென்னையில் நாளை அதிமுக செயற்குழு பொதுக்கூட்டம்
TVK Vijay.. விஜய்யின் தமிழ்நாடு பிரச்சார பேச்சு Vs புதுச்சேரி பேச்சு... எது பெஸ்ட்?
எனது கையெழுத்தை போலியாக போட்டுள்ளனர்: அன்புமணி மீது ராமதாஸ் பரபரப்பு குற்றச்சாட்டு!
முதல் மாதத்தில் உடையவனே தஞ்சம்.. பத்தாம் மாதத்தில் அழகான குழந்தை.. தாய்மையின் பேரழகு!
கடந்த 2 நாட்களாக அமைதியாக இருந்து வந்த தங்கம் விலை இன்று குறைந்தது... எவ்வளவு குறைவு தெரியுமா?
ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. அவ்வளவு நன்மைகள் உள்ளன கோவிலுக்கு செல்வதில்!
2026 சட்டசபைத் தேர்தலில் புதுச்சேரி மாநிலத்திலும் தவெக கொடி பறக்கும்...விஜய் அதிரடி பேச்சு
முதல் முறையாக.. சொன்ன நேரத்துக்கு முன்பே வந்து சேர்ந்த தவெக தலைவர் விஜய்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 09, 2025... இன்று வெற்றிகள் அதிகரிக்கும்
{{comments.comment}}