சென்னை: நடிகை ராதிகா ஆப்தே தனக்கு குழந்தை பிறந்துள்ளதாக கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் தோனி திரைப்படம் படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ராதிகா ஆப்தே. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் ஆல் இன் ஆல் அழகுராஜா மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கபாலி திரைப்படத்தில் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வாய்ப்பு கிடைக்காததால் தமிழை விட ஹிந்தியில் அதிகமான படங்களில் நடித்துள்ளார். ஹிந்தி மட்டும் இல்லாமல் பெங்காலி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தியவர். பல்வேறு வெப் சீரியஸ்களும் நடித்துள்ளார்.

அவ்வப்போது கிளாமரான புகைப்படத்துடன் நடித்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கியவர். அதேபோல் எதையும் துணிச்சலுடன் ஓப்பனாக பேசும் குணம் கொண்டவர். கடந்த 2011ஆம் தேதி பெனெடிக்ட் டெய்லர் என்பவரை காதலித்து வருவதாக தெரிவித்து அவருடன் லிவிங்டூ கெதராக வாழ்ந்து வந்தார். 2012 ஆம் ஆண்டு காதலித்த நபரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ராதிகா ஆப்தே திருமணம் முடிந்த பிறகும் பல மொழிகளில் மாறி மாறி படங்கள் நடித்து வந்ததால் குழந்தை பெறுவதை தள்ளி வைத்ததாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை ராதிகா ஆப்தே மற்றும் பெனெடிக்ட் டெய்லர் தம்பதிக்கு 12 வருடம் கழித்து குழந்தை பிறந்துள்ளது. அத்துடன் கையில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை ராதிகா ஆப்தே சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தேர்தல் குக்கரில் வெற்றி விசில் அடிக்குமா.. விஜய் ரசிகர்கள் + தொண்டர்கள் விரும்புவது இதைத்தானா?
அறிவுத் திருவிழா இல்லாமல்.. அவதூறுத் திருவிழா: தவெக தலைவர் விஜய் கடும் விமர்சனம்!
கால்பந்து விளையாட்டிலிருந்து ஓய்வு பெறப் போகிறேன்.. அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ
குத்துபாட்டிற்கு நடனமாடும் ஸ்ரேயா...அடுத்த ஹிட் பாட்டு ரெடி
காலபைரவர் ஜெயந்தி .. தேய்பிறை அஷ்டமி அல்லது காலாஷ்டமி தினம்.. பைரவர் வழிபாடு சிறப்பு!
தங்கம் விலை ஏறிய வேகத்தில் இறங்கியது... இன்று சவரனுக்கு ரூ.800 குறைவு!
தங்கம் விலை உயர்வு: 2026ல் உலகப் பொருளாதாரம் சரியுமா.. பாபா வாங்காவின் கணிப்பு என்ன?
2026ம் ஆண்டில் மொத்தம் 24 நாட்கள் அரசு விடுமுறை.. பிளான் பண்ணி Fun பண்ணிக்கோங்க!
{{comments.comment}}