சென்னை: நடிகர் கார்த்தி நல்ல பிள்ளை. அவர் லட்டு குறித்து தப்பாகவே பேசலை. பவன் கல்யாண் மிரட்டலுக்குப் பயந்து போய், நமக்கு எதுக்குடா இந்த அரசியல் என்று ஸாரி கேட்டார். அவர் ஸாரி கேட்கவே தேவையில்லை. பவன் கல்யாணம் ரவுடிசம் செய்து வருகிறார் என்று நடிகையும், முன்னாள் ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா கூறியுள்ளார்.
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நடிகை ரோஜா சன் செய்திகள் சானலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
நடிகர் பிரகாஷ் ராஜ் திருப்பதி லட்டு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். அவர் மிகவும் கரெக்டாகத்தான் பேசி வருகிறார். அதேபோல லட்டு விவகாரம் தொடர்பாக கார்த்தியிடமும் கேட்டனர். அதற்கு அவர் பதில் கொடுத்திருந்தார். பாவம் நல்ல பிள்ளை. நமக்கு எதுக்கு இந்த அரசியல் என்று ஸாரி சொன்னார். அவர் ஸாரி சொல்லவே தேவையில்லை. ரவுடிசம் செய்து பவன் கல்யாண் கார்த்தி, பிரகாஷ் ராஜையே மிரட்டுகிறார் என்றால் ஆந்திராவில் எப்படி மிரட்டுவார் என்பதைப் பாருங்கள்.
யார் என்ன பேசுகிறார்கள் என்று கூட காது கொடுத்துக் கேட்காமல் மிரட்டுகிறார்கள். சந்திரபாபு நாயுடு நிறைய பொய் பேசுவார். அவருக்கு இது புதிதல்ல. இதற்கு முன்பு நிறையப் பேசியுள்ளார். நாயுடு இயக்கத்தில் பவன் கல்யாணம் ஆக்ட் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அவரது பேச்சை யாராவது மொழி பெயர்த்துக் கேட்டுப் பாருங்கள். சம்பந்தமே இல்லாமல் பேசியிருப்பார்.
ஆந்திராவை ஏற்கனவே இரண்டாக பிரித்து விட்டார் சந்திரபாபு நாயுடு. இதனால் மக்கள் ஏற்கனவே அதிருப்தியில் உள்ளனர். எங்களது ஒரே அடையாளமாக இருந்தது பெருமாள்தான். இப்போது அவரது பெயரையும் கெடுத்து விட்டார் சந்திரபாபு நாயுடு. மக்கள் கடும் அதிர்ச்சியிலும் கோபத்திலும் உள்ளனர்.
வழக்கமாக ஒரு ஆட்சி வந்தால் ஒன்று அல்லது 2 வருடங்களில்தான் மக்களுக்கு அதிருப்தி கோபம் வரும். ஆனால் ஆட்சிக்கு வந்து 100 நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு அரசு மீது மக்களுக்கு அதிருப்தி வந்து விட்டது. மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எதையோ நினைத்து திருப்பதி லட்டு விவகாரத்தைக் கிளப்பினார் சந்திரபாபு நாயுடு. ஆனால் தற்போது அது அவருக்கே எதிராகத் திரும்பி விட்டது என்றார் நடிகை ரோஜா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இனி அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயர் வரக்கூடாது: டாக்டர் ராமதாஸ் போட்ட கண்டிஷன்!
புதுச்சேரி துணை நிலை ஆளுநருடன் மோதல்.. சமாதானமானார் முதல்வர் என். ரங்கசாமி!
மதுரையில் ரூ. 200 கோடி சொத்துவரி ஊழல்: சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்: டாக்டர் அன்புமணி
பிரகாஷ் ராஜ், ராணா, விஜய் தேவரகொண்டா.. 29 தெலுங்கு நடிகர், நடிகைகள் மீது வழக்கு
தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
தமிழக வெற்றிக் கழகம் என்று படகுகளில் எழுதினால் மானியம் மறுப்பதா.. விஜய் கண்டனம்
அதிமுகவை மீட்க முடியாதவர் பழனிச்சாமி தமிழகத்தை மீட்பேன் என்கிறார்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள்... எழுதிக் கொடுப்பதை அப்படியே வாசித்து வருகிறார்: அமைச்சர் சேகர்பாபு
புதுப் புது வரலாறு படைக்கக் காத்திருக்கும் சுப்மன் கில்.. 4 உலக சாதனைகளுக்கு ஆபத்து!
{{comments.comment}}