சென்னை: போன் நம்பர் மூலம் தன்னிடம் மோசடி நடந்ததாக நடிகை சனம் ஷெட்டி கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் 2012 ஆம் ஆண்டு வெளியான அம்புலி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை சனம் ஷெட்டி. தொடர்ந்து தொட்டா விடாது, மாயை, விலாசம், கதம் கதம் உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ரோலில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான பிக் பாஸ் சீசன் 4 ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டார். இதன் மூலம் இவர் பிரபலமாக அறியப்பட்டார்.
இதற்கிடையே குருதிக்காலம் என்ற வெப் தொடரிலும் நடித்து அசத்தியவர்.சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை சனம் செட்டி அவ்வபோது ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கப் பெறுவார். இதன் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. அந்த வரிசையில் சமீபத்தில் ஹாட்டான உடைய அணிந்து ஒர்க்அவுட் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
இந்த நிலையில் நடிகை சனம் ஷெட்டி தான் சந்தித்த ஒரு போன் கால் பண மோசடி குறித்து மக்களிடம் வீடியோ மூலம் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

எனது போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அந்த நம்பரை எடுத்துப் பேசும்போது உங்க போன் நம்பர் 2 மணி நேரத்தில் டிஆக்டிவேட் ஆகும். இதுவரை இந்த நம்பரில் 25 வழக்குகள் பதிவாகியுள்ளது என கூறியுள்ளனர். இதனைக் கேட்ட உடனேயே சனம் ஷெட்டி பயத்தில் என்ன ஆச்சு ..என்ன செய்வது ..என கேட்டுள்ளார். அப்போது நீங்கள் மும்பையில் சிம் வாங்கி உள்ளீர்கள். அந்த சிம்மில் இருந்து நிறைய பேருக்கு ஹராஸ்மென்ட் கால்ஸ் போயிருக்கு. அதேசமயம் போலீஸ் ஸ்டேஷனுக்கும் கால் பார்வேர்ட் ஆகி இருக்கு. நீங்கள் மும்பை வந்திருக்கிறீர்கள்.
அதற்கு சனம் ஷெட்டியோ நான் மும்பை வந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. மும்பையில் எனக்கு யாரையும் தெரியாது. இந்த ஒரு நம்பர் தவிர எனக்கு வேறு எந்த நம்பரும் தெரியாது எனக் கூறிய பின்பு, எங்களுக்கு முறையாக தகவல் கொடுங்க. நீங்க தகவல் கொடுத்தால் தான் உடனடியாக ரிப்போர்ட் பைல் பண்ணுவோம். இல்லையென்றால் உங்கள் நம்பர் போய்விடும். உங்களை கைது செய்ய வேண்டியதுதான் என பயமுறுத்தி உள்ளனர். அந்த சமயத்தில்தான் எனக்கு இது ஃபேக் காலாக இருக்குமோ என கிளிக் ஆச்சு என்று கூறியுள்ளார்.
ஒரு வேளை அவர் சுதாரிக்காமல் அந்த போன் காலில் பேசிய நபர் சொன்னதையெல்லாம் செய்திருந்தால் கண்டிப்பாக பணத்தை சுருட்டியிருப்பார்கள். இதுபோன்ற போன் கால்கள் வரும்போது கவனமாக இருங்க மக்களே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}