கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

Oct 05, 2024,02:24 PM IST

நாகை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து கோவில் மதில் சுவற்றின் மீது மோதி விபத்திற்கு உள்ளானது. இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.


நாகை மாவட்டம் தலைஞாயிறு  அருகே ஓரடியம்பலம் பகுதியை சேர்ந்த  அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ. எஸ். மணியன் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வேதாரண்யம் தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். இவர்  நாகப்பட்டினத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பணிகளை மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டு வருகிறார். இதற்காக  முன்னாள் அமைச்சர் மணியன் இன்று தனது காரில் வேதாரணத்திற்கு  புறப்பட்டு சென்றார்.




கார் திருப்பூண்டி- கரைநகர் இடையே வந்து கொண்டிருந்தது . அப்போது எதிர்பாராத விதமாக திடீரென காரின் குறுக்கே ஸ்கூட்டி ஒன்று வந்தது. இதனைப் பார்த்த கார் ஓட்டுநர் சுதாரித்து கொண்டு ஸ்கூட்டியின் மீது மோதாமல் இருப்பதற்காக காரை வேகமாக திருப்பினார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து அருகே இருந்த கோவிலின் மதில் சுவரின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் காரின் முன் பகுதி கடுமையான சேதத்தை சந்தித்தது.


அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். மறுபுறம் ஸ்கூட்டியில் இருந்து கீழே விழுந்த நபருக்கும்  காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரையும் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து  முன்னாள் அமைச்சர் நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்துக்கு குறித்து நாகை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்