தேர்தலைப் பார்த்து பின்வாங்கும் அதிமுக.. தகுதியற்ற எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர் பெரியகருப்பன்

Jun 18, 2024,03:20 PM IST

சென்னை:   விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் எடப்பாடி பழனிசாமி அந்த இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்றுதான் அர்த்தம். இதைத்தான் அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது என்று அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


ஸ்ரீ பெரும்புதூர் தொகுதியில், கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, திமுக அரசின் 3 ஆண்டு கால சாதனை மற்றும் மக்களவை தேர்தலில் டி.ஆர்.பாலு வெற்றி பெற்றதற்கான நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம்  ஆகியன குன்றத்தூரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.




அப்போது பேசிய அமைச்சர் பெரிய கருப்பன் பேசுகையில், பெரியார், அண்ணா, கருணாநிதி ஊட்டிய கொள்கை உணர்வை தழைக்கச் செய்யும் காரியத்தை முதல்வர் செய்து கொண்டிருக்கிறார். தமிழர் நலன், தமிழகத்தின் நலன் போற்றும்  இயக்கமாக திமுக இயக்கம் உள்ளது. இன்றைக்கு பிரதமர் மோடி மிகப் பெரிய நெருக்கடிக்கு காரணமாக இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கி மக்களவை தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை கண்டவர் முதல்வர்.


75 ஆண்டு காலமாக கொள்கை பிடிப்புடன் வாழையடி வாழையாக இந்த இயக்கம் வளர்ந்து வருகிறது. இந்த இயக்கம் வளர்ந்தால் தமிழக இனம் பாதுகாக்கப்படும். தமிழகம் வளர்ச்சி பெறும் தொடர்ந்து நூற்றாண்டு கண்ட நாயக்கர் கருணாநிதியின் புகழ் நிலைத்து நிற்க, கொள்கை பிடிப்புடன் இன்னும் பல ஆண்டுகள் முதல்வர் தலைமையில் இந்த இயக்கம் நல்ல அரசு தமிழகத்தை ஆள வேண்டும்.


கள்ள உறவு வைத்திருப்பவர்கள் அதனை நீட்டிக்கும் வகையில் தேர்தல் களத்தில் அதிமுக போட்டியிடுவதில்லை எனக் கூறியுள்ளனர். அது அச்சமா அல்லது அழுத்தத்தின் காரணமாக என தெரியவில்லை. இடைத்தேர்தலில் அதிமுக பின் வாங்குகிறது என்றால் பழனிச்சாமி இயக்கத்தை வழி நடத்துவதற்கு தகுதியான தலைவர் இல்லை என்பதே அவரது நடவடிக்கை உணர்த்தி இருக்கிறது.


அண்ணா, கருணாநிதி ஆகியவருடன் இந்த இயக்கம் முடிந்து விடும் என்று எதிரிகள் நினைத்தார்கள். ஆனால், தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் இருக்கும் காலத்திலேயே, அவருக்கு இணையாக மற்றொரு தலைவர் உருவாகி கொண்டு இருக்கிறார் என்ற எரிச்சலின் காரணமாக எதிர்க்கட்சியினர் உளறுகிறார்கள். அவர்களின் புலம்பலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை  என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... இன்றும் சவரனுக்கு ரூ.800 உயர்வு!

news

அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்

news

மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்

news

அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!

news

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!

news

23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்

news

அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!

அதிகம் பார்க்கும் செய்திகள்