விழுப்புரம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்தார். பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது.
இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்க உள்ள நிலையில், தற்போதோ அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கட்சிகள் அனைத்தும் தீவிரமாக கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றன. பல முக்கிய கட்சிகளின் கூட்டணி முடிவுகளை தெரிந்து கொள்வதற்காக மக்களும் ஆர்வம் காண்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து இரு தலைவர்களும் பேசியதாக கூறப்படுகிறது. கடந்த வாரம் டெல்லி சென்ற பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து பேசியுள்ளார்.
அதன்பின்னர் தமிழகம் திரும்பிய நயினார் நகேந்திரன், விழுப்புரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து, தற்போது சி.வி.சண்முகம் பாமக தலைவர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசியுள்ளார். பாமகவுடன் விரைவில் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கும் என நயினார் நாகேந்திரன் கூறியிருந்த நிலையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அதிமுக எம்.பி. சிவி சண்முகம் சந்திப்பு நடந்துள்ளது. இவர்களின் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூரில் பாதிக்கப்பட்டோரை பார்க்க செல்கிறாரா விஜய்?... பாதுகாப்பு வழங்கக் கோரி மனு
நல்லதோர் வீணைசெய்தே அதை .. நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ!
டாக்டர் ராமதாஸை தைலாபுரம் சென்று சந்தித்த சி வி சண்முகம்.. அதிமுக கூட்டணியில் இணைவாரா?
நவராத்திரி.. இன்று 8ம் நாள் : அலங்காரம், நைவேத்தியம், மலர், நிறம் முழு விபரம்!
கல்வி, இசை, கலைமற்றும் அறிவின் தெய்வம்.. சரஸ்வதிக்குப் பெயர் வந்தது எப்படி?
தங்கம், வெள்ளி விலையில் தினம் தினம் புதிய உச்சம்... இன்றைய விலை நிலவரம் இதோ!
கரூர் சம்பவத்திற்குப் பின்.. விஜய்யுடன் பேசிய முதல் தலைவர்.. ராகுல் காந்தி திடீர் பேச்சு ஏன்?
நாங்க புறக்கணிச்சா அதுக்காக கோப்பையைக் கொடுக்காம போவீங்களா.. இந்தியா கடும் கோபம்
கரூர் கூட்ட நெரிசல் துயரம்.. கவலைப்படாதீங்க விஜய்.. போன் செய்து ஆறுதல் கூறிய ராகுல் காந்தி
{{comments.comment}}