Devayani.. நீண்ட இடைவேளைக்கு பிறகு நாயகியாக தேவயானி நடிக்கும் .. நிழற்குடை!

Nov 01, 2024,03:08 PM IST

சென்னை:   90களில் முன்னணி நடிகையாக இருந்த தேவயானி நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நாயகியாக நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.


90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் தேவயானி. இவர் இயக்குனர் ராஜ்குமாரை திடீர் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இவருக்கு பட வாய்ப்புகள் படிப்படியாக குறைய தொடங்கின. சினிமா வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக சின்னத்திரை தொடர்களில் நடித்துவந்தார். அதிலும் குறிப்பாக இவர் நடித்த கோலங்கள் தொடர் அனைவராலும் விருப்பி பார்க்கப்பட்டது.2018ம் ஆண்டு எழுமின் என்ற படத்தில் கதையின் நாயகியாக விவேகக்கின் ஜோடியாக நடித்தார். அதன்பின்னர் எந்த படத்திலும் நடிக்காமல் இருந்த இவர் தற்பொழுது திரில்லர் படமான நிழற்குடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.




தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நிழற்குடை’. சிவா ஆறுமுகம் கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார்.இவர் இயக்குநர் கே எஸ் அதியமானிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர்.


தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் விஜித் கதாநாயகனாகவும், கண்மணி மனோகரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் இளவரசு, ராஜ்கபூர், மனோஜ் குமார், வடிவுக்கரசி, கவிதா ரவி, அக்ஷரா ஆகியோருடன் நிஹாரிகா, அஹானா என்கிற இரண்டு குழந்தை நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். மேலும் தர்ஷன் என்ற இளைஞர் முற்றிலும் மாறுபட்ட  கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆகிறார்.




இன்றைய இளைய சமூகம் வெளிநாட்டு மோகத்தால் தங்கள் குடும்ப உறவுகளையும்  பெற்றோரையும் தங்கள் குழந்தைகளையும் காப்பதில் இருந்து எப்படி எல்லாம் தடம் மாறுகிறார்கள் என்பதனையும். அதனால், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன என்பதை குடும்பப் பின்னணியில் எதிர்பாராத திருப்பங்களுடன் மர்ம முடிச்சுகளுடன் ஒரு திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த ‘நிழற்குடை’ விரைவில் வெளிவர இருக்கிறது.சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் ‘நிழற்குடை’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.  தற்போது ரிலீஸை நோக்கி போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

இந்த வாழ்க்கை ஒரு கனவா?

news

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை.. முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி அஞ்சலி

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 30, 2025... இன்று மகிழ்ச்சி தேடி வரும் ராசிகள்

news

பணியாளர் நியமனத்தில் முறைகேடா?.. களங்கம் கற்பிக்க மத்திய அரசு முயற்சி.. அமைச்சர் கே. என். நேரு

news

2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக பணி நியமனம் செய்து ரூ.888 கோடி திமுக ஊழல்: அண்ணாமலை குற்றச்சாட்டு

news

Rain Rain come again.. தமிழ்நாட்டில் அடுத்த 7 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்

news

மக்களைக் காக்க யாரும் எங்களுக்கு சொல்லித் தர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நவ. 5ல் சிறப்பு பொதுக்குழு: ஆழ் நீள் அடர் அமைதிக்குப் பிறகு.. பேசப் போகிறேன்.. விஜய் அறிக்கை

news

காலையில் மட்டுமில்லங்க..பிற்பகலிலும் உயர்ந்தது தங்கம் விலை.. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2,000 உயர்வு

அதிகம் பார்க்கும் செய்திகள்