சென்னை: நடிகர் மன்சூர் அலி கானிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள நிலையில் அடுத்து நடிகை திரிஷாவிடம் வாக்குமூலம் பெற காவல்துறை முடிவு செய்துள்ளது.
லியோ படத்தில் தன்னுடன் நடித்த நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையத்தின் உத்தரவின் பேரில் சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் மன்சூர் அலிகானை நேரில் வரவழைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தான் உள்நோக்கத்துடன் பேசவில்லை என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து திரிஷாவிடம் பகிரங்கமாக மன்னிப்பும் கோரி அறிக்கை வெளியிட்டார். இதையடுத்து தவறு செய்வது மனித குணம்.. மன்னிப்பது தெய்வகுணம் என்று டிவீட் போட்டார் திரிஷா. இதன் மூலம் மன்சூர் அலிகானை அவர் மன்னித்து விட்டதாக பொருள் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் மன்சூர் அலிகான் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. இந்தச் சூழ்நிலையில் இந்த வழக்கு அடுத்து எந்த திசையில் போகப் போகிறது என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அனேகமாக அடுத்து திரிஷாவிடம் விசாரணை நடத்தி அவரது கருத்தை காவல்துறை கேட்கும் என்று தெரிகிறது. அவர் நான் மன்சூர் அலிகானை மன்னித்து விட்டேன்.. இந்த வழக்கை தொடர விரும்பவில்லை என்று கூறினால் அதை ஏற்று வழக்கு வாபஸ் பெறப்பட வாய்ப்புள்ளது.
சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கு பின் இந்த வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கபடும் என தெரிகிறது.
எந்த ஷா வந்தாலென்ன?.. தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு Out of Control தான்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கூட்டணி குறித்த முடிவுக்கு இபிஎஸ்சுக்கே அதிகாரம்..அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்
2026 சட்டசபைத் தேர்தலுக்கு முன் கூட்டணி விரிவாக்கம்.. ராஜ்யசபா தேர்தலை உற்று நோக்கும் தி.மு.க
விஜய்யின் பேச்சு அரசியல் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது:புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம்
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 7 நாட்கள் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
அனைத்து ரேஷன் அட்டை தாரர்களுக்கும் பொங்கல் பரிசு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில்.. 16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சமூக ஊடகத் தடை.. எந்தெந்த செயலிகளுக்கு ஆப்பு?
தவெகவுடன் கூட்டணி வருமா?.. பதிலளிக்காமல் தவிர்த்த புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி
12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வரும் அப்பாஸ்.. படம் பேரு என்ன தெரியுமா?
{{comments.comment}}