சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் இருக்க பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மாநகர காவல் துறை கையில் எடுத்துள்ளது.
2025 ஆம் ஆண்டு தொடங்க இன்னும் ஒரு நாட்களே உள்ள நிலையில் நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இதற்காக நண்பர்களுடன் எங்கு போவது எப்படி கொண்டாடுவது என கொண்டாட்டங்கள் குறித்து இளம் தலைமுறையினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதனால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதாவது முக்கியமான இடங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள், கடற்கரைகள் சுற்றுலாத்தலங்கள் என பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படை, என மொத்தம் 19 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவியாக 1500 ஊர்க் காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
நாளை இரவு 9 மணியிலிருந்து சென்னை உள்ளிட்ட 425 முக்கிய இடங்களில் வாகன தணிக்கை குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க முப்பது சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் ரோந்து பணியில் ஈடுபடவும் உள்ளனர் .
அதேபோல் சாலைகளில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலைகளில் பைக் ரேஸ் நடக்காமல் தடுக்க 30 கண்காணிப்பு சோதனை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு,நாளை மாலை முதல் ஜனவரி 1 வரை பொதுமக்கள் கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் தற்காலிக காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் காவல் ஆணையர், குதிரைப்படைகள் எனப்படும் மணலில் செல்லக்கூடிய வாகனங்கள் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளன.
முக்கிய இடங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் குற்றத் தடுப்பு நடவடிக்கை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுத்தல் ஆகிய பணிகளுக்கு, தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ட்ரெயின்கள் மூலம் மக்கள் கூட்டத்தை கண்காணிக்கவும் உள்ளனர். அதே பகுதிகளில் அவசர உதவிக்கு மருத்துவ குழுவினருடன் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அடிக்குது குளிரு.. ராத்திரி 10 மணிக்கு மேல இவர்கள் எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்!
அதிமுக - பாஜக கூட்டணி: யார் யாருக்கு எத்தனை சீட்.. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது!
கண்ணாடியே கண்ணாடியே.. A Conversation With Mirror!
விண்ணுக்கும் மண்ணுக்கும் பொதுவாய் பிறக்கும் மனிதன்.. ஜோதிடம் அறிவோமா?
விவசாயம் காப்போம் வளமாக வாழ்வோம்.. இயற்கை வழி நடப்போம்!
விதையால் ஆயுதம் செய்வோம்.. விவசாயிகள் தினத்தன்று இந்த உறுதியை எடுப்போம்!
பொங்கல் பரிசுடன் ரூ.5000 வழங்க வேண்டும்...எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தல்
புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி விலை.. இன்று தங்கம் சரவனுக்கு ரூ.1,600 உயர்வு
National Farmer's Day.. உழவுக்கு வந்தனை செய்வோம்.. விவசாயிகளுக்கு சல்யூட் செய்வோம்!
{{comments.comment}}