சென்னை: சென்னையில் நாளை அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை செயலக அலுவலகத்தில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் நாளை மாலை 4 மணிக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் பூத் கமிட்டி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளின் களப்பணி குறித்து மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்ட கழகச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும்.
முன்னர் அறிவித்தபடி தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் நாளை நவம்பர் 21 ம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் வேறு ஏதேனும் முக்கியப் பிரச்சினைகள் குறித்தும் கூட விவாதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தற்போது அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வத்திடமிருந்து அதிமுகவின் அனைத்து அடையாளங்களையும் சட்ட ரீதியாக பிடுங்கி விட்ட நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. கூட்டத்திற்கு வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கவும் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனராம்.
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}