"விலகியது விலகியதுதான்".. மீண்டும் பாஜகவுடன் சேரவே மாட்டோம்.. கே.பி. முனுசாமி

Sep 28, 2023,12:51 PM IST

- மஞ்சுளாதேவி


சென்னை: பாஜக உடனான கூட்டணியில் இருந்து இரண்டு கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே  விலகினோம். மீண்டும் சேரவே மாட்டோம். இது உறுதி என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.


கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் கே.பி. முனுசாமி. அப்போது அவர் அதிமுக பாஜக கூட்டணி தொடர்பாக நிலவி வரும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார்.


அவரது பேட்டியிலிருந்து:


அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி அதிமுக மாவட்ட  செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளர்கள் பொறுப்பாளர்கள் அதிமுக மூத்த தலைவர்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்எல்ஏ, எம்பிக்கள் ஆகியோர் 2 கோடி அதிமுக தொண்டர்களும் ஏகமனதாக பாஜகவை கூட்டணியிலிருந்து வெளியேற்ற வேண்டும் . தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்ற உணர்வை வெளிப்படுத்தினர்.


எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கட்சி பொதுச் செயலாளராக இருந்த போதும் தொண்டரோடு தொண்டராகத்தான் இருப்பார். எங்கு சென்றாலும் நானும் ஒரு தொண்டர் தான் என்றுதான் பேசுவார். அப்படிப்பட்ட தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே கூட்டணியிலிருந்து விலகியது அதிமுக. 


ஆனால் ஊடகங்களில் விவாதங்களில் கலந்து கொண்ட மூத்த அரசியல்  விமர்சகர்கள் நேரம் வரும்போது மீண்டும் கூட்டணி சேர்ந்து விடுவார்கள் என மக்களை திசை திருப்ப முயற்சி செய்கின்றனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருடைய திருக்குமரன் உதயநிதி ஆகியோரும், அவர்கள் நாடகம் நடிக்கிறார்கள். நேரம் வந்தால் மீண்டும் இணைவார்கள் என்றும் பேசியுள்ளனர்.  உண்மையிலிருந்து அதிமுகவிலிருந்து பாஜகவை வெளியேற்றிய உடனே திமுகவினர் பயந்துள்ளனர். அதுதான் உண்மை.


எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு பாஜக தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசிய காரணத்தால் 2 கோடி தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எந்த சூழ்நிலையிலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது. கூட்டணி வைக்க மாட்டோம். வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எங்களது தலைமையிலான கூட்டணியுடன்தான் சந்திப்போம். 2026 சட்டமன்ற சட்டசபை தேர்தலிலும் கூட பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம். 


உண்மைக்கு மாறாக புகார்களை ,குற்றச்சாட்டுகளை அண்ணாமலை வைத்ததால் தான் கூட்டணியை  முறித்தோம்.  அண்ணாமலையை தமிழ்நாட்டு பாஜக தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறு நாங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை. பாஜக தேசிய தலைவர்கள் எங்களுடன் பேசினாலும் கூட மீண்டும் கூட்டணி கிடையாது .எங்களது முடிவில் மாற்றம் இருக்காது .புதிய கூட்டணி உருவாக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலை சட்டசபை தேர்தலை சந்திப்போம். நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டே மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டே நாங்கள் எந்த முடிவையும் எடுப்போம் என கூறினார்.

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்