டெல்லி: இந்திய விமானங்களுக்கு தனது வான்வெளியை பாகிஸ்தான் மூடியதால் Air India நிறுவனத்திற்கு இந்த ஆண்டு சுமார் $600 மில்லியன் வரை கூடுதல் செலவுகள் ஏற்படலாம். இழப்பீடுகளைக் குறைக்க அரசு உதவி செய்ய வேண்டும் என்று விமான நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் கனடாவுக்கு பாகிஸ்தான் வழியாக விமானங்கள் இயக்குகிறது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதையடுத்து பாகிஸ்தான் அரசும் பதிலுக்கு பல நடவடிக்கைகளை எடுத்தது. அதில் ஒன்றுதான் தனது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை.
பாகிஸ்தானின் வான்வெளி மூடப்பட்டதால், நமது விமானங்கள் சுற்றிப் போக வேண்டியுள்ளது. எரிபொருள் செலவுகள் அதிகரித்துள்ளன. மேலும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பா செல்லும் இந்திய விமானங்களின் பயண நேரமும் அதிகரித்துள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார பாதிப்பை குறைக்க "மானிய மாதிரி" திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று Air India கோரிக்கை விடுத்துள்ளது. வான்வெளி தடை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50 பில்லியன் இந்திய ரூபாய் (சுமார் $591 மில்லியன்) இழப்பு ஏற்படும் என்று Air India மதிப்பிட்டுள்ளது.
வான்வெளி மூடப்பட்டதால் ஏர் இந்தியாவுக்குத்தான் அதிக பாதிப்பு. ஏனென்றால், கூடுதல் எரிபொருள் செலவு மற்றும் கூடுதல் பணியாளர்கள் தேவைப்படுகிறார்கள் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. டாடா குழுமம் 2022-ல் மத்திய அரசிடமிருந்து ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. வாங்கிய பிறகு பல பில்லியன் டாலர் செலவில் விமான நிறுவனத்தை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளது. ஆனால், போயிங் மற்றும் ஏர்பஸ் நிறுவனங்களிடம் இருந்து விமானங்கள் வருவதில் தாமதம் ஏற்படுவதால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
2023-2024 நிதியாண்டில் ஏர் இந்தியா நிறுவனம் $520 மில்லியன் நஷ்டத்தை சந்தித்துள்ளது. 2022-23 நிதியாண்டில் ஏற்பட்ட நஷ்டம் ரூ.11,387.96 கோடியிலிருந்து, 2023-24 நிதியாண்டில் ரூ.4,444.10 கோடியாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது கடந்த நிதியாண்டில் வருவாய் 23.69 சதவீதம் அதிகரித்து ரூ.38,812 கோடியாக உயர்ந்துள்ளது.
ஏர் இந்தியா நிறுவனம் கடந்த ஆண்டு 100 ஏர்பஸ் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது. அதில் 10 பெரிய ஏ350 விமானங்களும், 90 சிறிய ஏ320 விமானங்களும் அடங்கும். மொத்தமாக 570 விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Vizhinjam Port: விழிஞ்ஞம் துறைமுகம்.. இந்தியா மற்றும் கேரளாவின் வர்த்தக வளர்ச்சியில் புது அத்தியாயம்
நேஷனல் ஹெரால்டு வழக்கில்.. சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு.. டெல்லி கோர்ட் நோட்டீஸ்
3, 5,8 வகுப்பு மாணவர்களை.. fail ஆக்கும் நடைமுறையை ஒருபோதும் ஏற்க முடியாது: அமைச்சர் அன்பில் மகேஷ்
பாகிஸ்தான் வான்வெளி மூடப்படுவதால்.. ஏர் இந்தியா நிறுவனத்துக்கு $600 மில்லியன் இழப்பு!
வெயிலிலிருந்து தப்ப.. நீண்ட நேரம் AC இயக்கினால்.. என்னென்ன பிரச்சினையெல்லாம் வரும் தெரியுமா?
மதுரை சித்திரை திருவிழா... 4ம் தேதி முதல் பொருட்காட்சி.. 45 நாட்களுக்கு!
என் இதயமே.. மீண்டும் ஒரு காதல் கதையில் ஷிகர் தவான்.. இன்ஸ்டாவில் குவியும் வாழ்த்துகள்!
பயணிகளின் கோரிக்கையை ஏற்று.. புறநகர் ஏசி ரயில்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.. தெற்கு ரயில்வே!
வாழ்த்து மழையில் நனையும்.. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்.. கொண்டாடும் ரசிகர்கள்!
{{comments.comment}}