மும்பை: விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விலகுவதற்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்கர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வுகள் குறித்து விளக்கம் அளித்துள்ளார். இருவரும் தங்களது ஓய்வுகளை தனிப்பட்ட முடிவாக எடுத்ததாகவும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அல்லது தேர்வு குழுவின் எந்தவொரு உறுப்பினரும் அவர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்றும் அவர் கூறினார் .
அஜித் அகர்கர் மேலும் கூறுகையில், நாங்கள் விராட் மற்றும் ரோஹித்துடன் பேசினோம். அவர்கள் இருவரும் இந்திய டெஸ்ட் அணிக்கு முக்கியமான பங்களிப்புகளை வழங்கியுள்ளனர். அவர்களின் ஓய்வுகள் அணிக்கு ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரக்ள் இருவரும் இந்திய கிரிக்கெட்டுக்கு முக்கியமானவர்கள். இருப்பினும் அவர்களது முடிவு, அவர்களாகவே எடுத்தது என்றார் அஜீத் அகர்கர்.

இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இந்திய டெஅணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பந்த் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சாய் சுதர்ஷன் உள்ளிட்ட பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், எதிர்பார்க்கப்பட்ட பலரது பெயர்கள் இதில் இடம் பெறவில்லை.
ஐபிஎல் போட்டியின் நடுவில்தான் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும் தங்களது டெஸ்ட் ஓய்வை அறிவித்தனர். இது சலசலப்பையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது என்பது நினைவிருக்கலாம்.
இரு வீரர்களுக்குமே 35 வயது தாண்டி விட்டது. இதுவும் கூட அவர்கள் ஓய்வை அறிவிக்கக் காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. காரணம், இந்திய கிரிக்கெட் வாரியம், இளம் வீரர்கள் வசம் அணியை மாற்றும் எண்ணத்தில் இருக்கிறது. அடுத்த தலைமுறை வீரர்களைக் கொண்ட அணியை உருவாக்குவதே அணியின் எதிர்காலத்துக்கு நல்லது என்று பிசிசிஐ நினைப்பதாலும் கூட ரோஹித், விராட் கோலி விலகும் முடிவுக்கு வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்
தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை
முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு
ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு
மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!
இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!
இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!
சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!
{{comments.comment}}