அஜீத்தே.. கார் ரேஸே.. துபாயைக் கலக்கியாச்சு.. அடுத்து போர்ச்சுகல் கிளம்பினார் அஜீத் குமார்!

Jan 18, 2025,08:05 PM IST

சென்னை: துபாயில் நடைபெற்ற 24ஹெச் ஜி3 கார் ரேஸில் மூன்றாவது இடத்தை பிடித்த நடிகர் அஜித்குமாரின் அணி, தற்போது போர்ச்சுக்கல் கார் ரேஸ்- 2025  தொடரில் பங்கு பெற உள்ளது. இதற்காக நடிகர் அஜித்குமார் இன்று சென்னையிலிருந்து போர்ச்சுக்கல் புறப்பட்டார். ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக திகழும் நடிகர் அஜித் நடித்த திரைப்படங்கள் வெளியாகி இரண்டாண்டுகள் ஆகிவிட்டது. இந்த  நிலையில் தற்போது நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படம் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் சில காரணங்களால் படம் வெளியீடு தள்ளிப்போனது.




எனவே விடாமுயற்சி மற்றும் குட் பேக் அக்லி படத்தின் வெளியீடு குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அதன்படி அஜித் நடித்துள்ள ’விடாமுயற்சி’ திரைப்படம் வருகிற பிப். 6 அன்று வெளியாகிறது. இதனைத் தொடர்ந்து, அவரது அடுத்த படமான ’குட் பேட் அக்லி’ ஏப்ரல். 10 அன்று வெளியாகவுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் படம் வெளியீடு குறித்து இப்போதே கொண்டாட துவக்கி விட்டனர். 


இதற்கிடையே நடிகர் அஜித் கார் ரேஸில் வெற்றி பெற்று ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.  நடிகர் அஜித்குமாரின் கார் ரேஸ் அவரின் மிகப்பெரிய கனவு. அவரின் விடாமுயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்து விட்டது. அதாவது நீண்ட இடைவெளிக்குப் பிறகு கார் ரேஸில் கவனம் செலுத்தி அஜித் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற துபாய் 24H கார் ரேஸில், 911 ஜிடி3 ஆர் பிரிவில் அஜித் குமார் ரேஸிங் அணி 3வது இடத்தைப் பிடித்து அசத்தியது. அவரது அணிக்கு ஸ்பிரிட் ஆப் தி கேம் விருது வழங்கப்பட்டது. 24 ஹெச் கார் ரேஸில் அஜித் வெற்றி பெற்றதும் தேசிய கொடியுடன் மேடையேறி தங்களின் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினார். அப்போது தமிழ்நாடு அரசின் விளையாட்டு லோகோவையும் அவர் அணிந்திருந்தார். இதனால் முதல்வர் மற்றும் துணை முதல்வர் நடிகர் அஜித்துக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதனை தொடர்ந்து அஜித் வெற்றி பெற்ற தருணங்களை வீடியோ மற்றும் புகைப்படம் மூலம் ரசிகர்கள் தங்களின் சோசியல் மீடியா பக்கங்களில் ஷேர் செய்து கொண்டாடி வந்தனர். அதேபோல் திரையுலகினர்கள் பலரும் நடிகர் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.


இந்த நிலையில் தற்போது போர்ச்சுகலில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து இன்று புறப்பட்டுச்  சென்றார் நடிகர் அஜித். போர்ச்சுகலில் நடைபெறவுள்ள தெற்கு ஐரோப்பிய போர்ஷே ஸ்பிரிண்ட் தொடர் 2025ல் அஜித்குமார் கார் ரேஸிங் அணி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் ரேஸ் பயிற்சியாளர் மாத்யூ டெட்ரியுடன் பொறுப்பேற்று இருப்பதாக அஜித்துடன் மேத்யூ இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சான்டாவுக்கே கிப்ட் கொடுத்த அந்த மொமன்ட்.. A Gift To Santa!

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

தலைநகரில் கிறிஸ்து பிறப்பு விழா: டெல்லி தேவாலயத்தில் பிரதமர் மோடி பங்கேற்பு!

news

மறைவேடங்கள் நிறைந்த இவ்வுலகில்.. In the world of disguise

news

அன்புக்குரிய சான்டா.. Santa, the classy lovable one!

news

பிறந்தார் இயேசு பாலன்.. கொண்டாடுவோம்.. Merry Christmas, Merry Christmas!

அதிகம் பார்க்கும் செய்திகள்