நாணல் போல் வளைந்து நின்றாள்.. வானவில்!

Aug 14, 2026,05:19 PM IST

- உடுமலைப்பேட்டை அமிர்தம் ரமேஷ்


வண்ணங்களோடு

என் எண்ணங்களில்

வானவில்


தொடு வானம் எங்கெங்கும் அழகழகாய்


நீல வண்ண கம்பளம்

நிறைந்திருக்க 




வான வெளியில் வீதி

எங்கும்


கருமை நிற மேகக் கூட்டங்களின்


பரவசமான அணிவகுப்பு சுயம் வரத்திற்காக 


இன்னிசையாய்

இனிமையான

இசைதந்த 

இடிச்சத்தம் 


வானவீதி எங்கும்

அதிர்ந்து முழங்க 


எங்கு  பார்த்தாலும்

வண்ண விளக்காய்


நொடிக்கு ஒரு முறை

அவள்


மின்னி மறைந்தாள்

மின்னல் பெண்


பௌர்ணமியாய்

வலம் வந்த அவள்


நிலவுமகள் வானில்

அழகை கூட்ட


நட்சத்திர தோழிகள் வழி நெடுகிலும்


கிண்டலாய் பார்த்து

கண் சிமிட்ட


இதமாய் வருடிச் செல்லும் மழைக்காற்றின் 


அச்சாரமாய் தூறும் 

மழையின் சாரள்


இவர்களின் ஒருமித்த

சங்கமத்தில் வானில்


ஏழு வண்ணங்களில்

பட்டாடை  உடுத்தி 


ஒய்யாரமாய் அழகின் அழகாய் அழகுச்சிலையாய் 


நாணல் போல் வளைந்து நின்றாள்


மணப் பெண் சுயம்வரத்திற்காக!

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை

news

ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?

news

US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!

news

ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!

news

ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!

news

Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!

news

Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?

news

சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!

news

Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்