எடப்பாடி பழனிச்சாமியும், அண்ணாமலையும்.. நேருக்கு நேர் உட்காரவைத்து.. என்ன பேசினார் அமித்ஷா?

Apr 27, 2023,09:20 AM IST
டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று மத்திய உள்துறை அமைச்சரும், முக்கியமான பாஜக தலைவருமான அமித்ஷாவை டெல்லியில் நேரில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் உடன் இருந்தார் என்பதால் அங்கு என்ன பேசப்பட்டது என்பது எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்டுள்ளது.

சமீப காலமாக அதிமுக - பாஜக கட்சிகளுக்கிடையே உரசல் அதிகமாக உள்ளது. தேசியத் தலைவர்களுக்கும், அதிமுகவுக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் லோக்கல் தலைவர்களுக்கு இடையேதான் உரசல் முட்டல் மோதல் அதிகமாக உள்ளது.

குறிப்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் இடையே ஒத்தே போகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் நான் தலைவர் பதவியிலிருந்து விலகி விடுவேன்.. நானும் ஜெயலலிதா எம்ஜிஆர் போலத்தான்.. என்றெல்லாம் தொடர்ந்து அதிமுகை சீண்டும் வகையில் அண்ணாமலை பேச.. அதற்கு அதிமுக பதிலடி கொடுக்க.. உச்சமாக,  அரசியல் அடிப்படை கூட தெரியதாவர் பற்றியெல்லாம் என் கிட்ட பேசாதீங்க.. அவர் ஒரு விளம்பரப் பிரியர் என்று எடப்பாடி பழனிச்சாமி அண்ணாமலையை விமர்சிக்க என தகராறு பெரிதாகி வந்தது.



இந்த நிலையில்தான் நேற்று எடப்பாடி பழனிச்சாமி டெல்லி கிளம்பிச் சென்றார். அவர் அதிமுக பொதுச் செயலாளரான பிறகு முதல் முறையாக டெல்லிக்குப் போனதால் அதிமுகவினர் தடபுடலாக வழியனுப்பி வைத்தனர். டெல்லியில் அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பின்போது சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.

அதை விட முக்கியமாக அண்ணாமலையும் அங்கு இருந்தார். ஜே.பி.நட்டாவின் வலதுபுறத்தில் அண்ணாமலையும், அமித்ஷாவின் இடதுபுறத்தில் எடப்பாடியும் அமர்ந்திருந்தனர். இதைப் பார்த்தபோது கூட்டணி குறித்தோ, அரசியல் நிலவரங்கள் குறித்தோ பேசியது போல இல்லை.. மாறாக உங்களுக்குள் என்ன சண்டை.. இந்த சண்டையெல்லாம் நமக்கு எந்த லாபத்தையும் தராது.. முதலில் இருவரும் சமரசமாகுங்கள்.. இணைந்து செயல்படுங்கள்.. அப்போதுதான் நாடாளுமன்றத் தேர்தலில் நமக்கு நல்ல பலன் கிடைக்கும். உங்களது கட்சியும் வலுப்படும் என்று அமித் ஷா பஞ்சாயத்து பேசி சமரசம் செய்தது போலவே தெரிந்தது.

அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்று கூறிய அண்ணாமலைக்கு மறைமுகமாக, இந்தக் கூட்டணி நீடிக்கும் என்பதை அமித் ஷா உணர்த்தியது போலவும் இந்த சந்திப்பு அமைந்தது. அதேபோல, அண்ணாமலையும் எங்களுக்கு முக்கியம், அவர் உங்களுக்கு சமமானவர் என்று எடப்பாடி தரப்புக்கு உணர்த்தியது போலவும் இந்த சந்திப்பைப் பார்க்க முடிகிறது.

இந்த சந்திப்புக்குப் பிறகு இருவரும் இணைந்து செயல்படுவார்களா.. சண்டை தீருமா.. என்பதெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

இந்த சந்திப்பு குறித்து அண்ணாமலை டிவீட் போட்டுள்ளார்.. அதற்கு ஒரு நெட்டிசன்.. பார்க்க "பேரன்ட் டீச்சர்" மீட்டிங் போலவே இருக்கு என்று கமெண்ட் அடித்துள்ளார்.!

சமீபத்திய செய்திகள்

news

தெய்வீக ஒளியின் கீழ்..Purpose, the Soul’s True Peace

news

அடுத்த 7 நாட்களுக்கு மழை இருக்கா? இல்லையா?... இதோ வானிலை கொடுத்த அப்டேட்!

news

செவிலியர்களுக்கு காலி இடங்கள் இருந்தால் மட்டுமே பணி வழங்க முடியும்: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

news

பிட்புல், ராட்வைலர் நாய்களை வளர்க்கக் கூடாது... மீறினால் 1 லட்சம் அபராதம்: மேயர் பிரியா!

news

ஒரு மனசு.. பல சிந்தனைகள்...One mind and too many thoughts

news

திமுக அரசால் பணிநீக்கம் செய்யபட்ட செவிலியர்களுக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும்:எடப்பாடி பழனிச்சாமி

news

கடும் பனிமூட்டம்...டெல்லிக்கு ரெட் அலர்ட்

news

வங்கதேசத்தில் மீண்டும் வன்முறை...நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு

news

தமிழகத்தில் இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

அதிகம் பார்க்கும் செய்திகள்