லக்னோ: அலெக்ஸா மூலமாக புத்திசாலித்தனமாக செயல்பட்டு ஒரு குரங்கிடம் சிக்கிய குழந்தையை சாதுரியமாக காப்பாற்றிய சிறுமிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த நிலையில் அந்த சிறுமிக்கு எதிர்காலத்தில் தனது நிறுவனத்தில் வேலை போட்டுத் தருவதாக தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தியைச் சேர்ந்தவர் சிறுமி நிக்கிதா, 13 வயதாகிறது. சம்பவத்தன்று இவரும், இவரது குட்டி தங்கச்சியும் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டுக்கு சில விருந்தினர்கள் வந்திருந்தனர். அவர்கள் வந்து விட்டுப் போன பிறகு கதவு சரியா சாத்தப்படாமல் இருந்துள்ளது. திறந்து கிடந்த வீட்டுக்குள் சில குரங்குகள் நுழைந்து விட்டன. வீட்டின் கீழ்ப் பகுதியில் கைக்கு கிடைத்ததை எல்லாம் எடுத்து அவை சிதறடித்தன.
சில குரங்குகள் மேல் மாடியில் ஏறி வர ஆரம்பித்தன. இதைப் பார்த்து நிக்கிதாவின் தங்கை அலறினாள். அதைப் பார்த்த நிக்கிதா அதிர்ச்சி அடைந்தார். ஆனாலும் டக்கென சுதாரித்த புத்திசாலித்தனமாக செயல்பட்டார். தனது வீட்டில் இருந்த அமேசான் அலெக்ஸாவிடம் நாய்கள் குரைக்கும் சப்தத்தை ஒலிக்கச் செய்யுமாறு கூறவே நாய் குரைக்கும் சத்தம் பலமாக கேட்க ஆரம்பித்தது. இதைப் பார்த்து மிரண்டு போன குரங்குகள் வேகம் வேகமாக வெளியேறத் தொடங்கின. சிறிது நேரத்தில் அத்தனை குரங்குகளும் வெளியேறி விட்டன. குழந்தையும் தப்பியது.
நிக்கிதாவின் இந்த புத்திசாலித்தனமான செயல் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. கொஞ்சமும் பயப்படாமல் தனது புத்தியை உபயோகித்த சிறுமியை பலரும் பாராட்டுகின்றனர். அந்த வகையில் தொழிலதிபர் ஆனந்த் மகிந்திராவும் சிறுமி நிக்கிதாவைப் பாராட்டியுள்ளார். இதுகுறித்து அவர் போட்டுள்ள எக்ஸ் பதிவில்,
நாம் தொழில்நுட்பத்துக்கு அடிமையாகிப் போவாமா அல்லது அதை கட்டுப்படுத்தி மேன்மை அடைவோமா என்ற கேள்வி நீண்ட காலமாக கேட்கப்படுகிறது. சிறுமி நிக்கிதாவின் கதை அதற்கு சரியான பதிலைக் கொடுத்துள்ளது. மனிதர்களுக்கு உதவவே தொழில்நுட்பம் உள்ளதை என்பதை இது நிரூபித்துள்ளது.
அந்த சிறுமியின் மின்னல் வேக சிந்தனை அசாதாரணமானது. கொஞ்சம் கூட கணிக்கவே முடியாத ஒரு சூழலில் மிகச் சிறந்த தலைவர் போல செயல்பட்டுள்ளார் நிக்கிதா. தனது படிப்பை முடித்தவுடன், அவருக்குப் பிடித்திருந்தால் எங்களது நிறுவனத்தில் அவர் பணியாற்ற நாங்கள் உதவக் காத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார் ஆனந்த் மகிந்திரா.
India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!
வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!
மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்
வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!
கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!
ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!
{{comments.comment}}