-ஸ்வர்ணலட்சுமி
திருப்பாவை பாசுரம் 25 :
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளர
தரிக்கிலா னாகித்தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்து கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதி யாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
தேவகியின் மகனாக நள்ளிரவு நேரத்தில் பிறந்து, அதே இரவிலேயே ஒளிந்து வளர்ப்பதற்காக யசோதையிடம் சென்றவனே! அப்படி நீ மறைந்து வளர்ந்தாலும் உன்னை அழிப்பதற்காக கம்சன் பல தீங்குகளை விளைவித்தான். உன்னை சாதாரண சிறுவன் என எண்ணிய கம்சனின் எண்ணத்தை மாற்றி, அவனின் வயிற்றில் பயம் என்னும் தீயை மூட்டிய உயர்ந்த திருமாலே! உன்னுடைய கிடைப்பதற்கு அரிதான அருளை யாசித்து பெறுவதற்காக வந்துள்ளோம். நாங்கள் வேண்டும் அருளை நீ தந்தாய் என்றால், உன்னுடைய மனம் மகிழும் வகையில், நீ விரும்பும் வகையில் உன்னுடைய செல்வ சிறப்பு, பக்தர்களுக்காக நீ செய்த செயல்களை பாராட்டி பாடிடுவோம். உன்னுடைய பெருமைகளை போற்றி பாடுவதால், துன்பங்கள் நீங்கி இன்பமாய் மகிழ்ந்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்
அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்
ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?
{{comments.comment}}