ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 08 - கீழ்வானம் வெள்ளென்று

Dec 24, 2023,07:26 AM IST

ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடல்கள் 30ம் நமக்கு பலவிதமான கருத்துக்களை எடுத்து சொல்கின்றன. இதில் கண்ணனின் பெருமைகளை மட்டுமின்றி இறைவனை எப்படி எல்லாம் சென்று வழிபட வேண்டும்? எந்த முறையில் சென்று வழிபட்டால் இறைவனின் அருளை பெற முடியும்? என்பதை மிக அழகாகவும், எளிமையாகவும் விளக்குகிறார். அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் பக்தியை சொல்வதாலேயே ஆண்டாளின் திருப்பாவை சிறப்பானதாக போற்றப்படுகிறது.




திருப்பாவை பாசுரம் 08 :


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண்; மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்

கூவுவான் வந்து நின்றோம், கோதுகலமுடைய

பாவாய்! எழுந்திராய்; பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை, மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.


பொருள் : 


பொழுது புலர துவங்கி விட்டது. வானம் விடிய துவங்கி, எருமைகள் உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு சென்று விட்டதை பார். நீ இப்படி தூங்கிக் கொண்டிருந்தால் உன்னை பார்த்து மற்றவர்களும் தூங்க சென்று விடுவார்கள். அவர்களை தடுத்து நிறுத்தி, என்னுடன் அழைத்து வந்துள்ளேன். வாயை திறந்து தனக்குள் அனைத்தும் அடக்கம் என உலகை காட்டிய மாயவனை போற்றி பாடி, வணங்க வேண்டும். நமக்கு அருள் செய்வதற்காக ஆவளாக காத்திருக்கும் அந்த கடவுள்களுக்கு எல்லாம் மேலான கடவுளான தலைனை சென்று வணங்கிட வேண்டும்.


விளக்கம் :


கோகுலத்தின் அழகையும், அங்கு காலைப் பொழுதில் அனைவரும் எத்தனை சுறுசுறுப்பாக தங்களின் வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் விளக்கிய ஆண்டாள். இன்றைய பாடலில் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சென்று இறைவனை வணங்குவதை பற்றி குறிப்பிடுகிறார். நாம் தனியாக சென்று இறைவனை வணங்குவதற்கும், மற்றவர்களுடன் கூட்டமாக சென்று வணங்குவதற்கும் வித்தியாசம் உண்டு. கூட்டாக செய்யும் பிரார்த்தனைக்கு பலன் அதிகம். கூட்டாக கோவிலுக்கு செல்லும் போது ஒரே நேரத்தில் அனைவரின் மனதிலும் பக்தி மட்டுமே நிலை கொண்டிருக்கும். இதையே ஆண்டாள் இந்த பாடலில் வலியுறுத்துகிறார்.


சமீபத்திய செய்திகள்

news

முதல் ரவுண்டில் பாதிகூட்டணியை காணோம்..2வதில் டிரைவர் கூட இருப்பாரானு தெரியலை: உதயநிதி ஸ்டாலின்!

news

26 ஆண்டுக்குப் பின் மணந்த "ரோஜா".. மிரட்டிய சத்தியன் மகாலிங்கம்.. இன்னொரு ரவுண்டு வாங்க பாஸ்!

news

ரஸ்தாளி வாழைப்பழம்.. ஊட்டச்சத்து நிறைந்த ராயல் பழம்.. டெய்லி சாப்பிடுங்க.. ஹெல்த்தியா இருங்க!

news

திருச்சி சுற்றுப் பயணம்.. தவெக தலைவர் விஜய்க்கு போலீஸ் விதித்த 23 நிபந்தனைகள்!

news

செப்டம்பரில் 12ல் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசுத் துணைத் தலைவராக பதவி ஏற்கிறார்

news

நேபாளத்தில் வன்முறை... பிரதமர் ராஜினாமா... ராணுவ ஆட்சி அமல்!

news

Gold rate: எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வரும் தங்கம் விலை

news

திருச்சி மரக்கடையை அதிர வைக்க தவெக ரெடி.. ஆனால் தொண்டர்களிடம் நிதானம் தேவை!

news

அமித்ஷாவை சந்திக்கச் சென்ற செங்கோட்டையன்.. பாஜக., மேலிடம் சொன்ன சேதி என்ன தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்