மாட்ரிட்: பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளை முன்னிட்டு, தற்போது ஸ்பெயின் நாட்டில் முகாமிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று. அவரது நினைவு நாள், திமுகவினர், மற்ற அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் சார்பாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் திமுகவினர் ஆயிரக்கணக்கில் பேரணியாக சென்று அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். தற்போது அரசு முறை சுற்றுப்பயணமாக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்தினார். ஸ்பெயினில் தான் தங்கியுள்ள இடத்தில், அலங்கரிக்கப்பட்ட அண்ணாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின். அவருடன் துர்கா ஸ்டாலின், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உடன் இருந்து அண்ணாவின் படத்திற்குகு மரியாதை செலுத்தினர்.
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அண்ணா நினைவு தினம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் தாயின் தலைமகனாகப் பிறந்து, நமக்கெல்லாம் அண்ணனாக - அறிவு மன்னனாக வழிகாட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் நினைவுநாள்! இன்று அமைதிப் பேரணியாகச் சென்ற கழக உடன்பிறப்புகள், பேரறிஞர் அண்ணா சொன்ன கடமை, கண்ணியம்,கட்டுப்பாட்டோடு உழைத்து மாநில சுயாட்சியை வென்றெடுக்கும் மக்களுக்கான அரசு ஒன்றியத்தில் அமைய ஓய்வின்றி உழைக்க வேண்டும்! எண்ணி துணிக கருமம்! என்று கூறியுள்ளார்.
கணவரை மீட்ட கற்புக்கரசி நளாயினியின் கதை!
Short story: பிரார்த்தனை!
ஈரான் போர் எதிரொலி: ஆசியாவுக்கான எண்ணெய் கப்பல் போக்குவரத்து செலவு புதிய உச்சம்!
ஆறு பெருக்கெடுத்து ஆள வட்டம் போடுதடி!
Let us celebrate Erode day
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
{{comments.comment}}