அவதூறு செய்வோருக்கு பதிலளிக்காமல்.. கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள்.. அண்ணாமலை அட்வைஸ்

Jan 30, 2023,11:37 AM IST
சென்னை: உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர்கள். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம்,அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.



பாஜகவிலிருந்து வெளியேறிய நடிகை காயத்ரி ரகுராம் குறித்து பாஜகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் மிகவும் மோசமான போஸ்ட் போட்டு அது பெரும் பரபரப்பையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது. பாஜகவினரே கூட அதை கண்டித்து கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

நடிகை கஸ்தூரி உள்ளிட்டோரும் இதை வன்மையாக கண்டித்துள்ளனர். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக சொல்லாமல் ஒரு அறிக்கை வெளியிட்டு பாஜகவினர் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அண்ணாமலை.

அந்த அறிக்கை விவரம்:

பலரின் தியாகத்தாலும் பலரின் அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி, விமர்சனங்களுக்கு அஞ்சுவதா?.. விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கப்பூர்வமான  விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அவதூறுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். சமீபகாலமாக என் மீது சமூக வலைதளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதரிகளும் தன்னார்வலர்களும் மிக ஆக்ரோஷமாக எதிர்வினையாற்றி வருவதாக  அறிகிறேன். 

கட்சியின் தொண்டர்களும், தன்னார்வலர்களும் தங்களது சமூக வலைதளங்களில் எதிர்வினையாற்றும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு பதில் அளிக்கத் தெரியாது என்பது பொருள் அல்ல. சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதைக் காட்டிலும் கடந்து செல்வதே ஆக சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு, பாரதிய ஜனதாக் கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள், நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கோ, எதிர்க்கட்சியினரின் வீண் விமர்சனங்களுக்கோ அல்லது சில பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கோ செவி சாய்க்காமல், உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்குப் பங்காற்றுங்கள். 

விஷமத்தனமான  கருத்துக்களை பரப்பி உங்களது கவனத்தை சிதறடிப்பதுதான் சமூக வலைதள பரப்புரையாளர்களின் முழு நேர வேலை. நாம்தான் கவனமாக இருக்க வேண்டும். நமது கருத்தில் ஆழம் உள்ளபோது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது. என் மேல் தினம்தோறும் சமூக வலைத்தளங்களில்அவதூறு பரப்பி வருகின்றனர். சில பத்திரிகைகள் என்னைப் பற்றி அவதூறு பரப்பினால் தான் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்குஇன்று தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குப் பயந்தால் என்னுடைய கிராமத்தில் நான் ஒடுங்கிக் கிடக்க வேண்டியதுதான். அதைதான் அவர்களும் விரும்புகிறார்கள் என்பதையும் நான் அறிவேன். நமது செயல்பாடுகள் அவதூறு பரப்புவோருக்கு எரிச்சல் தருமேயானால் நாம் சரியான திசையில் பயணிக்கிறோம் என்பதையே அது வெளிக்காட்டுகிறது.

உங்கள் கருத்தை முன்வைக்க தயாங்காதீர். பகிரங்கமாக உங்களது கருத்துக்களை முன்வையுங்கள். அதேசமயம், அவதூறு பரப்புவதையே முழு நேர பணியாகக் கொண்டு இயங்கி வரும் சிலருக்குப் பதில் அளித்து உங்களது நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்லக் கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார் அண்ணாமலை.

சமீபத்திய செய்திகள்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

news

Dude.. பிரதீப் ரங்கநாதன் படத்தில் கேமியோ ரோல்.. யார் பண்றாங்கன்னு தெரியுமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்