கோயம்பத்தூர்: இனிமேல் விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க மாட்டேன். கட்சி அலுவலகத்தில் மட்டுமே பிரஸ் மீட் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
கோவைக்கு இன்று வந்த அண்ணாமலையிடம் விமான நிலையத்தில் செய்தியாளர்கள் கருத்து கேட்க முயன்றனர். ஆனால் அவர் காருக்குள் அமர்ந்திருந்த நிலையில், இனி லைப்ல விமான நிலையத்தில் பிரஸ் மீட் பண்ண மாட்டேண்ணா. எல்லாத்தையும் ஆர்டர் பண்ணப் போறோம். பாத்ரூம் போகும்போது, வெளியே வரும்போது இனி யாரும் பேச மாட்டாங்க. இனி எல்லாமே கட்சி ஆபீசில்தான் நடக்கும்.
கட்சித் தலைவர்கள் ஷெட்யூல் போட்டுக் கொடுத்திருவாங்க. எல்லாத்தையும் தலைவர்கள் சொல்வாங்க. ஏன்னா, விமானத்திலிருந்து இறங்குவோம். இங்கு ஏதாவது 2 விஷயம் நடந்திருக்கும். நமக்கு இங்க வரும்போது அது தெரியிறதில்லை. இதனால் முறைப்படி செய்யப் போறோம். எல்லாமே 24 மணி நேரத்துக்கு முன்னாடியே வந்துரும் என்று கூறி விட்டுக் கிளம்பிச் சென்றார் அண்ணாமலை.

விமானநிலையத்திற்கு வரும் தலைவர்களிடம் பேட்டி எடுப்பது செய்தியாளர்கள் வழக்கமாக மேற்கொள்வதுதான். இதற்காகவே ஒரு இடத்தில் கூடி இருப்பார்கள். அங்கு வந்து தலைவர்கள் பேட்டி கொடுத்து விட்டுச் செல்வார்கள். காலம் காலமாக நடப்பதுதான் இது. ஆனால் அண்ணாமலை இன்றைய பேட்டியைத் தவிர்த்தது ஏன் என்று தெரியவில்லை. அதேசமயம், இனிமேல் தலைவர்கள் கட்சி அலுவலகத்தில் மட்டுமே பேட்டி நடக்கும் என்று அவர் கூறியுள்ளது, கோவைக்கு மட்டுமா அல்லது தமிழ்நாடு முழுமைக்குமா என்று தெரியவில்லை.
அமைச்சரவையில் அண்ணாமலைக்கு இடம் தராதது, தமிழிசை உள்ளிட்ட தலைவர்கள் சில கருத்துக்களைக் கூறியுள்ளது உள்பட தர்மசங்கடமான கேள்விகளுக்குப் பதில் அளிப்பதைத் தவிர்க்கவே அண்ணாமலை விமான நிலைய பிரஸ்மீட்டைத் தவிர்த்தாரா என்ற கேள்வியும் எழுகிறது. அதேசமயம், கட்சி அலுவலகத்தில் பிரஸ் மீட் நாளை உண்டு என்று அவர் சொல்லியிருப்பதால் நாளை அண்ணாமலையிடம் கேட்கப் போகும் கேள்விகளுக்கு அவர் அளிக்கப் போகும் பதில்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
ஆந்திராவில் பேருந்து விபத்து..20 பேர் பலி..11 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன:மாவட்ட ஆட்சியர் தகவல்!
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
{{comments.comment}}