விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

Jan 14, 2026,05:51 PM IST
டெல்லி: தவெக தலைவர் விஜய்யை நாங்கள் சாதாரணமாக எடை போடவில்லை. விஜய்க்கு என தனி கூட்டம் உள்ளது என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பொங்கல் வைத்து விழாவைக் கொண்டாடினார். இந்த விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் போன்ற கலை நிழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவில் பிரதமர் மோடி பசுவிற்கும் அதன் கன்றிற்கும் வேட்டி மற்றும் மாலை அறிவித்து உணவு வழங்கினார். பிரதமருடன் தமிழகத்தை சேர்ந்த பாஜக முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர். அவர்களுடன் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன், ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பராசக்தி படக்குழுவினர்களும் கலந்து கொண்டனர்.





இந்நிலையில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், விஜய்யை நான் சாதாரணமாக எடைபோடவில்லை. அவர் ஒரு சினிமா நட்சத்திரம். தவெகவில் செங்கோட்டையன் போன்றோர் இணைந்துள்ளனர். கிளைகளை உருவாக்கிவருகின்றனர். அவர்கள் தொண்டர்கள் களத்தில் இருப்பதை நானும் பார்க்கிறேன். திமுகவை எதிர்க்கும் விஜய் எங்கு சென்று சேரவேண்டும் என்பதை அவர்தான் தெளிவுபடுத்த வேண்டும்.

நான் சீமானையும் சாதாரணமாக நினைக்கவில்லை. உதாரணத்திற்கு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், எந்தப் பிரதமருக்கும் ஆதரவில்லை என்பவருக்கே 8.5% வாக்குகள் வந்துள்ளன. நாங்கள் எந்த கட்சியையும் இழிவு படுத்த வில்லை, திமுக வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்கள் அவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள் என நம்புகிறோம். அண்ணன் சீமான் திராவிட கட்சிகளே வேண்டாம் என நினைக்கிறார் எனவே அவர் எந்த கூட்டணிக்குள்ளும் வரப்போவது இல்லை. விஜய், சீமானை குறைத்து மதிப்பிட கூடாது. மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு-இடை நிலை ஆசிரியர்களுக்கு விரைவில் நற்செய்தி-அமைச்சர் தகவல்

news

அதிமுக நேர்காணல்...சென்னை நிர்வாகிகளை வறுத்தெடுத்த இபிஎஸ்

news

ராகுல் காந்தியின் ‘ஜனநாயகன்’ ஆதரவு ட்வீட்: உறுதியாகிறதா காங்கிரஸ்-தவெக கூட்டணி?

news

விஜய்யை சாதாரணமாக எடை போட முடியாது... விஜய்க்கு தனி கூட்டம் உள்ளது: அண்ணாமலை

news

பொங்கலுக்கு மழை பெய்ய வாய்ப்பில்லை: வானிலை மையம் தகவல்!

news

மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்

news

சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!

news

லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்

news

தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்

அதிகம் பார்க்கும் செய்திகள்