பெங்களூரு பிளாட்பாரத்தில் தீவிர சிந்தனையில் அண்ணாமலை... குவிந்த கமெண்ட்டுகள்!

May 08, 2023,12:36 PM IST

பெங்களூரு: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சாலையோர பிளாட்பார்மில் அமர்ந்து செல்போன் பார்த்துக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தைப் பார்த்து அவரது ஆதரவாளர்கள் ஆறுதல் சொல்லியும், மோட்டிவேட் செய்தும், உணர்ச்சிவசப்பட்டும் கமெண்ட்டுகளைக் குவித்துக் கொண்டுள்ளனர்.


தமிழ்நாடு பாஜக தலைவராக இருக்கும் அண்ணாமலை, அரசியலுக்கு வந்த மிகக் குறுகிய காலத்திலேயே ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவரானவர். எந்தவித அரசியல் அனுபவமும், பின்புலமும் இல்லாமல் மாநிலத் தலைமைப்  பொறுப்பில் அவர் அமர வைக்கப்பட்டது பாஜக தலைவர்களுக்கே அதிர்ச்சியும், ஆச்சரியமும்தான்.


இருந்தாலும் கட்சித் தலைமை முடிவுக்கு எதிராக முனுமுனுக்கும் வழக்கம் பாஜகவில் இல்லை என்பதால் அமைதியாக பொறுத்துக் கொண்டனர். தலைவரான பின்னர் அண்ணாமலை அதிரடியைக் காட்டத் தொடங்கினார். பிற கட்சியினரையும், சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் கட்சிக்குள் இழுத்துப் போட்டது அண்ணாமலை டீம். இதனால் திராவிடக் கட்சிகளுக்கு இணையாக புஜபலம் காட்டி சத்தாய்த்து வருகிறது "சாப்ட்"டான கட்சியாக அறியப்பட்ட பாஜக.


இந்த நிலையில் தற்போது  கர்நாடக சட்டசபைத் தேர்தலில் இணைப் பொறுப்பாளராக அண்ணாமலையை களம் இறக்கி விட்டுள்ளது பாஜக தலைமை. அண்ணாமலையும் அங்கு சூறாவளி போல சுழன்று சுழன்று பணியாற்றி வருகிறார். பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொள்கிறார். வேட்பாளர் தேர்விலும் கூட அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார்.





இப்படி இருக்க அண்ணாமலை பிளாட்பாரத்தில் உட்கார்ந்திருப்பது போல  ஒரு புகைப்படம் வெளியானது. பார்க்க சோகமாக அமர்ந்திருப்பது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் புகைப்படத்தை உற்றுப் பார்த்தால்தான் அவர் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பது புலனாகிறது. இந்தப் புகைப்படத்தை வைத்து அண்ணாமலை ஆதரவாளர்கள் உணர்ச்சி  பொங்க கருத்திட்டு வருகின்றனர்.


மனோகரன் என்பவர், இன்னோவா கார் வயர்லெஸ் சிஸ்டம் வாக்கி டாக்கி வழி நெடுகிலும் ஒவ்வொரு சந்திப்பிலும் சக பணியாளர்கள் ராயல் சல்யூட் அதிகாரியின் கண் அசைவுக்கு ஏற்ப கார் ஓட்டும் ஓட்டுநர்

அதிகாரிகள் உரையாடல்கள் மூலம் நிர்வாகத்தை கண்காணித்தல் சாதித்தாய் இன்னும் சாதிப்பாய். ஒரு சராசரி மனிதனாக சாலை நடைபாதை கல் மீது அமர்ந்திருப்பது கிடைத்தற்கரிய ஆறுதல் என்று கூறியுள்ளார்.


நான் மேதகு டெல்டாக்காரன் என்பவரோ, 13-ஆம் தேதிக்கு அப்புறம் என்ன நடக்கும்னு இப்பவே தெரிஞ்சிடுச்சு போல என்று கூறி நக்கலடித்துள்ளார். ஆக, மொத்தம் தான் என்ன செய்தாலும் அண்ணாமலை தன்னைப் பற்றி மற்றவர்களைப் பேச வைக்கிறார்.. அதுவே அவருக்கு வெற்றிதான்.


சமீபத்திய செய்திகள்

news

SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்

news

ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்

news

ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!

news

12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

news

பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

news

Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு

news

நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு

news

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!

news

காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??

அதிகம் பார்க்கும் செய்திகள்