கே.டி.ராகவன் புது வீட்டில் அண்ணாமலை.. சுற்றிப் பார்த்து ஹேப்பி!

May 21, 2023,10:49 AM IST
சென்னை: பாஜக பிரமுகர் கே.டி. ராகவன் புதிய வீட்டின் கிரகப் பிரவேச நிகழ்ச்சியில்  தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு வீட்டை சுற்றிப் பார்த்து விட்டு வாழ்த்தினார்.

தமிழ்நாடு பாஜகவின் முன்னாள் பொதுச் செயலாளர்தான் கே.டி.ராகவன். ஒரு காலத்தில் டிவி விவாதங்கள் முதற்கொண்டு கே.டி.ராகவன்தான் முதன்மையாக இருப்பார். ஆனால் அண்ணாமலை வந்த பிறகு எல்லாமே தலைகீழாக மாறி விட்டது. அவரது ஆபாச வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பையும், சலசலப்பையும் ஏற்படுத்தியது.




இந்த சம்பவத்திற்குப் பிறகு அப்படியே ஒதுங்கி விட்டார் கே.டி.ராகவன். பாஜகவுக்குள் நடந்த  உள்ளடி வேலைகளே ராகவன் வீடியோவுக்குக் காரணம் என்றும் பரபரப்பு கிளம்பியது. கே.டி.ராகவன் விவகாரம் தொடர்பாக விசாரிக்க கமிட்டியெல்லாம் கூட அமைக்கப்பட்டது. ஆனால் அது என்ன ஆனது என்று இதுவரை தெரியவில்லை.

இந்த நிலையில் கே.டி.ராகவன் புதிதாக வீடு கட்டியுள்ளார். அதன் கிரகப்பிரவேசம் நடந்தது. இதில் முக்கிய அழைப்பாளராக அண்ணாமலை கலந்து கொண்டார். கிரகப்பிரவேச விழாவுக்கு வந்த அண்ணாமலை வீடு முழுவதையும் சுற்றிப் பார்த்தார். பூஜை அறை முதல் அனைத்து அறைகளையும் அவருக்கு கே.டி.ராகவன் சுற்றிக் காட்டினார். வீட்டைச் சுற்றிப் பார்த்து விட்டு சிறப்பாக இருப்பதாக அண்ணாமலை பாராட்டினாராம்.




இதுதொடர்பான புகைப்படங்களை அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டுள்ளார். அதற்கு கே.டி.ராகவனும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த கிரகப்பிரவேசம் மூலம் அண்ணாமலைக்கும், கே.டி.ராகவனுக்கும் இடையே இருந்த மனப்பூசல் நீங்கி விட்டதாகவும் பாஜக உள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விரைவில் கே.டி.ராகவனை டிவி விவாதங்களில் பாஜக சார்பாக பார்க்கலாம் என்று நம்புவோம்.

சமீபத்திய செய்திகள்

news

மாமனார் சாயலில் மற்றுமொரு அப்பா!

news

இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!

news

2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!

news

2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்

news

2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!

news

அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!

news

அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!

news

பேரன்பு பேராற்றல்.. இரண்டின் கூட்டு வடிவம்.. வாஜ்பாய்.. வைரமுத்து புகழாரம்

news

அழகு இல்லாமல் இல்லை!

அதிகம் பார்க்கும் செய்திகள்