சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான 29ம் ஆண்டு கால திருமண உறவை முறித்துக் கொள்ள முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவி சாய்ரா பானு. இது சினிமா உலகில் மற்றொரு அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
நடிகர்கள் தனுஷ், ஜெயம் ரவி ஆகியோரின் விவாகரத்து வழக்குகள் ஒரு புறம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கின்றன. மற்றொரு புறம் இசை துறையை சேர்ந்த இமான், ஜி.வி.பிரகாஷ் குமார் என பலரும் விவாகரத்துக்களை அடுத்தடுத்து அறிவித்து திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகின்றனர். இந்த நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மனைவியும் அவரை பிரிய உள்ளதாக தன்னுடைய விவாகரத்தை அறிவித்துள்ளார்.

மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் இன்று உலகின் டாப் இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்து வருகிறார். திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், இசை நிகழ்ச்சிகள் என படுபிஸியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், அவரது மனைவி சாய்ரா பானுவிற்கும் திருமணமாகி 29 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில் தற்போது சாய்ரா பானு விவாகரத்தை அறிவித்துள்ளார்.
சாய்ரா பானு சார்பில் அவரது வழக்கறிஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இருவருக்கும் இடையே நிரப்ப முடியாத இடைவெளி ஏற்பட்டுள்ளது. தங்களின் தனிப்பட்ட கருத்துக்களுக்கு பொதுமக்கள் மதிப்பளிக்க வேண்டும் என்றும் சாய்ரா பானு கேட்டுக் கொண்டுள்ளார். இவரின் இந்த முடிவிற்கு திரை துறையை சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னை புத்தகக் கண்காட்சி 2026.. தேதி சொல்லியாச்சு.. புத்தகப் பிரியர்களே.. ரெடியாகுங்க!
தென்காசி மற்றும் திருநெல்வேலியில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கொடுத்த அலர்ட்!
மாமதுரைக்குத் தேவை வளர்ச்சி அரசியலா அல்லது அரசியலா?.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
இந்தியா முழுவதும் இன்று ஒரே நாளில் 500க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து
திருப்பரங்குன்றம் தீப வழக்கு... தீர்ப்பு ஒத்திவைப்பு: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
நான் எந்த சூழ்நிலையிலும் தனிக் கட்சி ஆரம்பிப்பேன் என்று சொல்லவில்லை ஓ. பன்னீர்செல்வம்!
சென்னையில்.. 10 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்படும் அபாயம்!
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு.. ரிசர்வ் வங்கி நடவடிக்கை.. இஎம்ஐ குறையலாம்!
திருவண்ணாமலை தூய்மைப் பணியாளர்களை.. கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன கலெக்டர்
{{comments.comment}}