சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த வட சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவர் அஞ்சலையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீஸார் தீவிரமாக விசாரணையில் இறங்கியுள்ளனர். சரமாரியாக பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். முதலில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணைக்குப் பிறகு மேலும் 3 பேர் சிக்கினார்கள். இதற்கு இடையில் திருவேங்கடம் என்ற கைதி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இந்தக் கொலை வழக்கில் மேலும் பல ரவுடிகள், அரசியல் கட்சிகளின் தொடர்புடையவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வந்தன. அவர்களில் முக்கியமாக புளியந்தோப்பு அஞ்சலை பெயர் அடிபட்டது. இவர் முன்னாள் ரவுடி ஆற்காடு சுரேஷின் காதலி ஆவார். சென்னை மேற்கு மாவட்ட பாஜக மகளிர் அணி முன்னாள் துணைத் தலைவராக இருந்து வந்தார். இவரது பெயர் கொலை வழக்கில் அடிபட்டதும் கட்சியை விட்டு இவர் நீக்கப்பட்டார். இதேபோல சம்போ செந்தில் எனப்படும் சம்பவம் செந்தில் என்பவர் பெயரும் அடிபடுகிறது. இவர் தூத்துக்குடியைச் சேர்ந்தவர். வக்கீலாக இருந்து ரவுடியாக மாறியவர் இவர். இவர்தான் இந்தக் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக போலீஸ் தரப்பு நம்புகிறது.
இவர்கள் தவிர மேலும் பலரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த நிலையில் புளியந்தோப்பு அஞ்சலையை, ஓட்டேரியில் வைத்து தற்போது போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த அஞ்சலைக்கு கொலை வழக்கில் முக்கியப் பங்கு இருப்பதாக போலீஸ் தரப்பு நம்புகிறது. மேலும் இந்தக் கொலைக்காக தனது சார்பில் ரூ. 10 லட்சம் பணத்தை அஞ்சலை கொடுத்ததாகவும் போலீஸ் தரப்பு கூறுகிறது. அஞ்சலையை விசாரிக்கும்போது மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.
தூக்கி எறியப்பட்ட என்னை அரவணைத்து, அன்பு செலுத்தியவர் விஜய்: செங்கோட்டையன் ஓபன் டாக்!
முழு மனதோடு என்டிஏ கூட்டணியில் இணைந்திருக்கிறேன்...தினகரன் அதிரடி
கூட்டணி குறித்து தற்போது வரை பாஜகவிடமிருந்து எந்த அழைப்பும் வரவில்லை: பிரேமலதா விஜயகாந்த்!
தேஜகூவைத் தேடி அடித்துப் பிடித்து ஓடி வரும் கட்சிகள்.. அடுத்து யாரு தேமுதிகவா?
அதிமுக-பாஜக கூட்டணி ஒரு மூழ்கும் கப்பல்.. அதில் ஏறுவோரும் மூழ்கடிக்கப்படுவார்கள்: செல்வப்பெருந்தகை
கடலோர தமிழகத்தில் நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
முதல் பேச்சிலேயே தமிழ்நாட்டைத் தொட்ட பாஜக தலைவர் நிதின் நபின்.. திட்டம் என்ன?
தமிழகப் பதிவுத்துறை முக்கிய அறிவிப்பு: 2 நாட்களுக்கு Citizen Portal இணையதளம் செயல்படாது!
தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரன்... அன்புடன் வரவேற்ற எடப்பாடி பழனிச்சாமி
{{comments.comment}}