சென்னை: நடிகர் அதர்வா முரளி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார் அதிதி ஷங்கர். அதர்வாவின் தம்பியான ஆகாஷுடனும் ஒரு படத்தில் ஜோடியாக அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு அக்கா தங்கையான நடிகைகள் அம்பிகா - ராதா ஆகியோர் ஒரே ஹீரோவுடன், ஒரே சமயத்தில் நடித்த வரலாறு தமிழ் சினிமாவில் உண்டு. இப்போது தலைகீழாக அண்ணன் தம்பியுடன் ஒரே ஹீரோயின் இணைந்து நடிக்கும் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவாரி ஃபிலிம்ஸ் ஸ்ரீ ரங்கநாதன் திரைத்துறையில் மிகுந்த அனுபவமிக்க திரைப்பட தயாரிப்பாளராகவும், விநியோதனராகவும் வலம் வருபவர். இந்த திரைப்பட நிறுவனம் ரசிகர்களுக்கு எப்போதும் பிடித்த வகையிலான எண்டர்டெயின்மென்ட் படங்களை வழங்குவதில் பெயர் பெற்றது. அந்த வகையில் தற்போது இளம் ஜோடியான நடிகர் அதர்வா முரளி மற்றும் அதிதி சங்கர் ஆகியோருடன் முதல் முறையாக புதிய படத்தில் கமிட்டாகி உள்ளனர்.
இப்படம் நியூ ஏஜ் எண்டர்டெயினராக உருவாகிறது. மேலும் இந்த படத்திற்கு தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 5 என்றும் பெயரிடப்பட்டுள்ளது. ஸ்ரீவாரி பிலிம்ஸ் ரங்கநாதன் வழங்கும் இப்படத்தை எம். ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்திற்கு சுகுமாரன் ஒளிப்பதிவு செய்ய, சாம் சி எஸ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படம் குறித்து நடிகர் அதர்வா முரளி கூறுகையில், திரையுலகில் மிகுந்த அனுபவமும் கொண்ட பி.ரங்கநாதன் சார் போன்ற சிறந்த தயாரிப்பாளருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன். தரமான பொழுதுபோக்கு கதைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், ஊக்குவிப்பதிலும், அதற்காக செலவு செய்வதிலும் அவருடைய ஈடுபாடு அபாரமானது. இயக்குநர் ராஜேஷின் திரைக்கதைக்கு இவர் தயாரிப்பு செய்து அதில் நான் நடிப்பது பெருமையான விஷயம். முழுக்க முழுக்க எண்டர்டெய்ன்மெண்ட் படங்களை எதிர்பார்த்து திரையரங்குகளுக்கு வருபவர்களை இந்தப் படம் நிச்சயம் ஏமாற்றாது என கூறினார்.
இயக்குநர் எம்.ராஜேஷ் கூறும்போது, காலத்திற்கு ஏற்றாற் போல, சினிமாவின் ஒவ்வொரு ஜானரிலும் மாற்றம் ஏற்படும். இருப்பினும், தமிழ் சினிமா ரசிகர்கள் எண்டர்டெயினர் படங்களை ஒருபோதும் கொண்டாடத் தவறியதில்லை. பார்வையாளர்கள் திரையரங்குகளில் அவர்களை மகிழ்விக்கும் இதுபோன்றத் தருணங்களை என் படங்களில் கொடுக்க எனக்கு இடம் கொடுத்ததை நான் பாக்கியமாக கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய பி. ரங்கநாதன் சாருக்கும், கதையில் நடிக்க ஒத்துக் கொண்ட அதர்வா முரளி சாருக்கும் நன்றி. இந்தப் படம் மூலம் ரசிக்கத்தக்க பொழுதுபோக்குப் படத்தைக் கொடுக்க ஆவலுடன் காத்திருக்கிறோம் என கூறினார்.
தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் கூறுகையில், இத்தனை வருடங்களில் விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் நான் கவனித்த வரையில் எண்டர்டெயினர் படங்களைத் தமிழ் ரசிகர்கள் நிபந்தனையின்றி கொண்டாடுவதை நேரில் பார்த்திருக்கிறேன். அவர்களின் 2-3 மணிநேர சினிமா அனுபவத்தை முற்றிலும் ரசிக்க வைக்கும் ஒரு கண்ணியமான பொழுதுபோக்கு படத்தை அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். அந்த வகையிலான படம்தான் இது.
அதர்வா முரளி தனது அர்ப்பணிப்பு மற்றும் திறமையான நடிப்பிற்காகப் பெயர் பெற்றவர். இந்தப் படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக வித்தியாசமான பரிமாணத்தில் அவரது நடிப்புத் திறனை வெளிப்படுத்தும். அனைத்து வயதினரையும் கவரும் வகையில் ஒரு திரைக்கதையை ராஜேஷ் உருவாக்கியுள்ளார். பல திறமைகள் மற்றும் சிறந்த நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அதிதி ஷங்கருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். தற்போது ஜெயம் ரவியின் படப்பணியில் ராஜேஷ் பிஸியாக இருக்கிறார். அது முடிந்ததும் விரைவில் இதன் படப்பிடிப்பை தொடங்க உள்ளோம் என கூறினார் .
அதர்வா - ஆகாஷுடன் அதிதி சங்கர்
இயக்குநர் விஷ்ணுவர்த்தன் நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் ஒரு ரொமான்டிக் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் ஆகாஷ் முரளி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை எஸ்பி ஃபிலிம்ஃபேர் கிரியேஷன்ஸ் சார்பில் சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அதாவது இவர் ஆகாஷ் முரளியின் மாமனார் ஆவார்.
சேவியர் பிரிட்டோவுடன் அவரது மகளும், ஆகாஷின் மனைவியுமான சினேகா பிரிட்டோ இணைந்து தயாரித்துள்ள, இந்த படத்தில் ஹீரோயினாக நடிப்பவர் அதிதி சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}