சென்னை: சென்னையில் இன்றைய தங்கம் விலை நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. வெள்ளியின் விலையும் நேற்றைய விலையிலேயே எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் பெருளவில் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. இதனால் மேலும் விலை குறையும் என்று வாடிக்கையாளர்கள் கருதி காத்திருந்து வருகின்றனர். தங்கத்தின் விலை விரைவில் உயரவே வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஏனெனில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 2,500 டாலருக்கும் மேல் இருக்கிறது. மேலும், செப்டம்பர் மாதத்தில் அமெரிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்புள்ளது. இதனால் தங்கத்தின் விலை உயர அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதன் காரணத்தினால் தங்கம் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் தற்பொழுதே வாங்கி வைக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர். தற்போது தங்கம் விலை எந்த மாற்றமும் இன்று நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர் நிபுணர்கள்.
சென்னையில் இன்றைய தங்கம் விலை
சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 6,715 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 53,720 ரூபாயாக உள்ளது.
10 கிராம் 22 கேரட் தங்கம் இன்று ரூ.67,150 ஆக உள்ளது.
100 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.6,71,500க்கு விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,325 ரூபாயாக உள்ளது.
8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.58,600 ஆக உள்ளது.
10 கிராம் 24 கேரட் தங்கம் இன்று ரூ.73,250 ஆக உள்ளது.
100 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,32,500க்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்
மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.
டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,730க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும் விற்கப்படுகிறது.
கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.
பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.
கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.
புனேவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,715க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,325க்கும் விற்கப்படுகிறது.
அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,720க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,340க்கும் விற்கப்படுகிறது.
சென்னையில் இன்றைய வெள்ளி விலை
வெள்ளி விலையும் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இருந்து வருகிறது.
ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 93.50க்கு விற்கப்படுகிறது.
8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 748 ஆக உள்ளது.
10 கிராம் வெள்ளியின் விலை ரூ.935 ஆக உள்ளது.
100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,350 ஆக உள்ளது.
1 கிலோ வெள்ளியின் விலை ரூ.93,500 ஆக உள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாகிஸ்தானுக்கு எதிரான அனைத்து விதமான தாக்குதல்களும் நிறுத்தப்பட்டன - இந்தியா அறிவிப்பு
தாக்குதலை உடனடியாக நிறுத்த இந்தியா, பாகிஸ்தான் ஒப்புதல் - அமெரிக்க அதிபர் டிரம்ப் தகவல்
இந்திய ராணுவத்துக்கு ஆதரவாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிரமாண்ட பேரணி.. ஆளுநர் பாராட்டு!
எனது வருவாயை தேசிய பாதுகாப்பிற்காக அளிக்கிறேன்...இளையராஜா அறிவிப்பு
அமேசானில் ரூபாய் 3 லட்சத்துக்கு பில்.. எதற்கு தெரியுமா?.. இந்த பயலை வச்சுக்கிட்டு!!
முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனைக் கூட்டம்
பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில்.. காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு.. பீதியில் உறைந்த மக்கள்..!
ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் இவரா?...செம சம்பவம் காத்திருக்கு போலவே
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் படப்பிடிப்பு நடத்த வேண்டாம்...aicwa அறிவுறுத்தல்