பால்டிமோர்: அமெரிக்காவின் மேரிலான்ட் மாகாணத்தில் உள்ள பால்டிமோர் ஆற்றுப் பாலத்தின் மீது கப்பல் மோதியதில், அந்தப் பாலம் அப்படியே விழுந்து விட்டது. இதில் பலர் ஆற்றில் விழுந்தனர்.
இந்த பாலம் விழுந்த சம்பவம் அமெரிக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சரக்குக் கப்பல் மோதியதன் காரணமாகத்தான் பாலம் இடிந்து விழுந்துள்ளது என்றாலும் கூட இது சாதாரண சம்பவம் அல்ல என்று அமெரிக்கர்கள் கருதுகிறார்கள்.
பால்டிமோர் பாலம், விழுந்தது தொடர்பான வீடியோக்கள் வைரலாக பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக நடைபெறும் சம்பவமாக இதை அமெரிக்கர்கள் பார்க்கவில்லை. மிகப் பெரும் அதிர்ச்சியுடன் இந்த சம்பவம் பலரால் பகிரப்பட்டு வருகிறது. பால்மோர் நகரில் பட்டாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே மிகப்பெரிய பாலம் உள்ளது. பிரிட்ஜ் மீது ஒரு பெரிய சரக்கு கப்பல் போதி விபத்தை ஏற்படுத்தியது.
இதில் பாலத்தின் முக்கியத் தூண் இடிந்து விழுந்தது. இதனால் பாலம் அப்படியே மொத்தமாக இடிந்து ஆற்றில் விழுந்து விட்டது. உள்ளூர் நேரப்படி அதிகாலை ஒன்றரை மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து காரணமாக அந்த அந்த சரக்கு கப்பல் தீப்பிடித்து எரிந்து ஆற்றில் மூழ்கியது. பாலமும் முழுமையாக இடிந்து உடைந்து விழுந்து விட்டது. இதில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரம் தெரியவில்லை. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த சில பைக்குகள், கார்கள் ஆற்றில் விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து மேரிலான்ட் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில் இந்த பாலத்தின் வழியாக பெரிய அளவில் போக்குவரத்து நடந்து வரும் நிலையில் தற்போது போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
மறைந்த போப் ஆண்டவர் உடலுக்கு.. ஜனாதிபதி முர்மு இன்று அஞ்சலி.. குவியும் உலக தலைவர்கள்..!
ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி
கடந்த 3 நாட்களாக சரிந்து வரும் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
பட்டாசு வெடித்து.. உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி உதவி.. முதல்வர் மு க ஸ்டாலின்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?
தவெகவின் பூத் கமிட்டி மாநாட்டில்.. கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து புறப்பட்டார்.. விஜய்!
முட்டி மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ்.. மீண்டும் தோல்வி.. தட்டித் தூக்கிய ஹைதராபாத்!
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
{{comments.comment}}