டெல்லி: 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
அணித் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர், இந்த அறிவிப்பை வெளியிட்டார். பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை நடைபெறவிருக்கும் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டி20 போட்டி முடிந்த மறுநாள் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொடரை இந்தியா வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் துணை கேப்டன் ஷுப்மன் கில் ஆகியோரின் தற்போதைய ஃபார்ம் பெரிய கவலையாக உள்ளது. இவர்களில் யாரையாவது அணியிலிருந்து நீக்குவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், தனது சிறப்பான ஆட்டத்திறன் இருந்தபோதிலும் அணியில் சேர்க்கப்படவில்லை.

விக்கெட் கீப்பர்களாக ஜிதேஷ் ஷர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் அணியில் உள்ளனர். ஆனால் ஜிதேஷ் ஷர்மா இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் பலமுறை மாற்றப்பட்டார். பின்னர் அவர் விளையாடும் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
ஷிரேயஸ் ஐயர் டிசம்பர் 2023 முதல் எந்த டி20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடவில்லை. அவர் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். ரிங்கு சிங், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்படவில்லை. அவர் தொடர்ந்து அணியில் இருந்தவர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களில் வருண் சக்ரவர்த்தி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது.
இந்திய டி20 உலகக் கோப்பை 2026 அணி வீரர்கள் பட்டியல்:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)
அபிஷேக் ஷர்மா
சஞ்சு சாம்சன்
திலக் வர்மா
ஹர்திக் பாண்டியா
ஷிவம் துபே
ரிங்கு சிங்
அக்ஸர் படேல் (துணை கேப்டன்)
ஜஸ்பிரித் பும்ரா
ஹர்ஷித் ராணா
அர்ஷ்தீப் சிங்
குல்தீப் யாதவ்
வருண் சக்கரவர்த்தி
வாஷிங்டன் சுந்தர்
இஷான் கிஷன்
டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகள் விவரம்:
இந்தியா vs அமெரிக்கா - வான்கடே ஸ்டேடியம், மும்பை - சனிக்கிழமை, பிப்ரவரி 7, 2026.
இந்தியா vs நமீபியா - அருண் ஜேட்லி ஸ்டேடியம், டெல்லி - வியாழக்கிழமை, பிப்ரவரி 12, 2026.
இந்தியா vs பாகிஸ்தான் - ஆர். பிரேமதாசா ஸ்டேடியம், கொழும்பு - ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 15, 2026.
இந்தியா vs நெதர்லாந்து - நரேந்திர மோடி ஸ்டேடியம், அகமதாபாத் - புதன்கிழமை, பிப்ரவரி 18, 2026.
இதேபோல இந்தியா - நியூசிலாந்து டி 20 தொடருக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
முதல் டி20: நாக்பூர் - புதன்கிழமை, ஜனவரி 21, 2026.
இரண்டாவது டி20: ராய்ப்பூர் - வெள்ளிக்கிழமை, ஜனவரி 23, 2026.
மூன்றாவது டி20: குவாஹாத்தி - ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 25, 2026.
நான்காவது டி20: விசாக் - புதன்கிழமை, ஜனவரி 28, 2026.
ஐந்தாவது டி20: திருவனந்தபுரம் - சனிக்கிழமை, ஜனவரி 31, 2026.
வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்
நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்
களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு
உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!
எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)
2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்
சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!
செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
{{comments.comment}}