மும்பை: இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார். அணியில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு இடமளிக்கப்படவில்லை. அதேசமயம் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாய் சுதர்ஷனுக்கு இடம் கிடைத்துள்ளது.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. டெஸ்ட் தொடருக்கான கேப்டனாக ரோஹித் சர்மா தொடர மாட்டார் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கேற்ப அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோல விராட் கோலியும் ஓய்வை அறிவித்து விட்டார்.

இந்த நிலையில் தற்போது இந்திய அணியும், புதிய கேப்டனையும் பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் சில ஆச்சரியங்களும் இடம் பெற்றுள்ளன. அதாவது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ருத்துராஜ் கெய்க்வாட் இடம் பெறவில்லை. அதேபோல ஷ்ரேயாஸ் ஐயர், சர்பிராஸ் கான், சஞ்சு சாம்சன் என பலருக்கும் இடம் கிடைக்கவில்லை.
மேலும் ரிஷப் பந்த்துக்குப் பதில் பும்ராவை துணை கேப்டனாக அறிவித்திருக்கலாம் என்றும் விமர்சகர்கள் மத்தியில் விவாதம் கிளம்பியுள்ளது.
இந்திய அணி விவரம்:
சுப்மன் கில், ரிஷப் பந்த், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யூ ஈஸ்வரன், கருண் நாயர், நிதீஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜுரேல் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், சர்துள் தாக்கூர், ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.
கல்வி எனும் ஆயுதத்தால் அனைத்தையும் தகர்த்தெறிந்த அறிவுச்சூரியன்தான் அம்பேத்கர்:முதல்வர் முக ஸ்டாலின்
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?. நயினார் நாகேந்திரனுக்கு கனிமொழி கேள்வி!
உலகமே உற்றுப் பார்த்த மோடி - புடின் சந்திப்பு.. அசைந்து கொடுக்குமா அமெரிக்கா?
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை நேரில் பார்த்தால்.. 21 தலைமுறைக்கு முக்தி கிடைக்குமாம்!
Festival Trains annoounced.. சொந்த ஊருக்குப் போக கவலையில்லை.. ஸ்பெஷல் ரயில்கள் அறிவிப்பு!
11ம் வகுப்பு மாணவர்கள் தாக்கியதில்... +2ம் வகுப்பு மாணவன் பலி... 15 மாணவர்கள் கைது!
கீரை சாப்பிடாத குழந்தைகளும் விரும்பி உண்ணும் கீரை தொக்கு.. லஞ்சுக்கு சூப்பர் ரெசிப்பி!
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்.. 149 பள்ளிகளுக்கு 8ம் தேதி விடுமுறை
இடியாப்பம்.. நீல கலர் ஜிங்குச்சா.. கலர் கலரா இடியாப்பம் செஞ்சு சாப்பிடலாமா?
{{comments.comment}}