டெல்லி: இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் ஐபிஎல் தொடரை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாகவும், அதன் பின்னர் புதிய அட்டவணை வெளியிடப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் அருகே உள்ள அழகிய பைசரன் பள்ளத்தாக்கு பகுதிகளில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் எதிரொலியாக இந்தியா பதிலடி கொடுத்து வருகிறது. ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் ஒரு பகுதியாக 9 பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டது.
இதனையடுத்து மே 8 வியாழக்கிழமை ஜம்மு, பதான்கோட், உதம்பூர், உள்ளிட்ட இடங்களை பாகிஸ்தான் ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தியதை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. அதேபோல் ஸ்ரீநகர் விமான நிலையத்தை நோக்கி பாகிஸ்தான் ஏவிய ஏவுகணைகளை இடைமறித்து அழித்தது. இதனால் அப்பகுதிகளில் போர் பதற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதன் காரணமாக பாகிஸ்தான் இந்திய எல்லைப் பகுதிகளில் உள்ள அனைத்து மக்களும் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும். ஜன்னல்களை மூடி வைத்து அவற்றின் அருகே இருப்பதை தவிர்க்க வேண்டும். சைரன் ஒலிக்கும். அது தெளிவாக தெரிந்தவுடன் மீண்டும் செய்தி அனுப்பவோம். நமது ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன. அவர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டது. இதனால் ஜம்மு பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பு நடவடிக்கைளை மேற்கொண்டுள்ளனர். நகர் முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. பூஞ்ச் மற்றும் ராஜோரி மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாடு கோடு அருகே அதிகாலை மீண்டும் சைரன் சத்தம் கேட்டதாகவும், வெடிச்சத்தம் கேட்டதாகவும் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஜம்மு முழுவதும் மின்தடை அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையே பாகிஸ்தானின் தொடர் தாக்குதல் காரணமாக, எல்லைப் பகுதிகளில் பதற்ற நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி நேற்று தரம்சலாவில் நடைபெற்ற பஞ்சாப்-டெல்லி அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும் மைதானம் முழுவதும் உயர் மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருள் சூழ்ந்தது. பார்வையாளர்கள் உடனே மைதானத்தை விட்டு வெளியேறும்படி அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்போது நடைபெறும் ஐபிஎல் தொடர் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில், இந்தியா பாகிஸ்தான் இடையே மோதல் அதிகரித்து வரும் நிலையில் நாளுக்கு நாள் நிலைமை மாறுபடுகிறது. தற்போதைய சூழ்நிலையை நாங்கள் தொடர்ந்து கவனித்து வருகிறோம். ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உள்ளோம். கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் உள்ளிட்டோரின் பாதுகாப்பு தான் எங்களுக்கு மிகவும் முக்கியம் என கூறியிருந்தார்.
தற்போது ஐபிஎல் தொடர் ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை நடத்தப்பட்ட 57 போட்டிகளுடன் தொடர் ஒரு வார காலம் நிறுத்தி வைக்கப்படும். அதன் பிறகு நிலவும் சூழலுக்கேற்ப மிச்சம் உள்ள போட்டிகளை நடத்துவது தொடர்பாக முடிவு செய்யப்பட்டு புதிய அட்டவணை வெளியாகும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
இ்நத நெருக்கடியான நேரத்தில் ராணுவத்துடனும், மத்திய அரசுடனும், நாட்டு மக்களுடனும் பிசிசிஐ நிற்பதாகவும் இந்திய கிரிக்கெட் வாரிய செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}