மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

Nov 17, 2025,02:00 PM IST
- க.சுமதி

பெங்களூரு: மோமோஸ் வியாபாரத்தில் லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் வட மாநில இளைஞர்கள் குறித்த செய்தியால், பெங்களூரில் டாக் ஆப் தி டவுன் ஆக மாறியுள்ளனர். ஆனால் இது சாத்தியமில்லை என்று பலரும் கூறி வருகிறார்கள்.

K. K. மோமோஸ் &  சூப்ஸ் என்ற மோமோஸ் விற்பனையகம் பெங்களூரு மக்களிடையே ரொம்பப் பிரபலமாகியுள்ளது. இந்த விற்பனையில் ஈடுபட்டு வருவது வட இந்திய இளைஞர்கள்தான். இவர்கள் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 950 பிளேட் மோமோக்களை விற்பதாக வெளியான செய்திதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.

இந்த மோமோஸ் கடையில் கேசி பெரேரா என்ற  சோசியல் மீடியா கிரியேட்டர், ஒரு நாள் உதவியாளராக இருந்துள்ளார். நாள் முழுக்க இவர்களின் கடையில் விற்பனையை நேரில் இருந்து பார்த்து அதுகுறித்த செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதன் பிறகுதான் இந்த மோமோ விற்பனையாளர்கள் வைரலானார்கள்.



அதாவது இந்த கடையானது மாலை 5 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும் என்றும் இந்த கடையில் ஒரு பிளேட் சமோசாவிற்கு 110 ரூபாயும் எனவும் ஒரு  ஒரு மணி நேரத்தில்  118 பிளேட்டுகள் விற்பனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார் கேசி பெரேரா. கடை மூடும் சமயத்தில் 950 பிளேட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாகவும் தோராயமாக ஒரு நாள் வருமானம் ஒரு லட்சத்துக்கும் மேல் எனவும் கேசி பெரேரா பதிவிட்டு இருந்தார்.  (தற்போது தனது பதிவை அவர் நீக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது)

இந்த கணக்கின்படி  மாத வருமானம் 31 லட்சம் எனவும் கணக்கிட்டு கூறியிருந்தார்.  இந்த பதிவை பார்த்த பலரும் இளைஞர்களின் கடின உழைப்பை பாராட்டினர். சிலர் இதை விமர்சித்திருந்தனர். அதாவது ரோடுகளில் விற்கப்படும் கடைகளில்  ஒரு பிளேட் மோமோஸ் 110. ரூபாய் என்பது சாத்தியமில்லை எனவும் ஒரு மணி நேரத்திற்கு 118 பிளேட்டுகள் விற்பனை என்பதும் சாத்தியமில்லை எனவும் எனவும் தங்களது  கருத்துக்களையும் பதிவிட்டிருந்தனர். 

இந்த கேசி பெரேராவுக்கு இதேதான் வேலை.. சாலையோர விற்பனையகங்களுக்குச் சென்று அவர்களுக்கு உதவியாளராக இருப்பார். விற்பனையிலும் உதவுவார். பிறகு அதை வீடியோவாகப் போடுவார். இன்ஸ்டாவில் களை கட்டிக் காணப்படும் ஒரு பிரபலமாகவும் இருக்கிறார். இவர் சொல்வது எல்லாமே பயங்கரமாகத்தான் இருக்கிறது. ஆனால் பல விஷயங்களை நம்ப முடியாமல் இருக்கும். அப்படித்தான் இந்த மோமோ விற்பனையாளர்கள் குறித்து கிளப்பி விட்டு விட்டார்.

எது எப்படியோ இன்று இந்த கேகே மோமோஸ் பெங்களூருவில் வைரலாகி விட்டது. பரபரப்பாகவும் மாறி விட்டது. சரி உண்மையிலேயே இவர்கள் ஒரு நாளைக்கு 1 லட்சம் தான் சம்பாதிக்கிறார்களா இல்லையா என்பதை வருமான வரித்துறைதான் தெளிவாக்கிச் சொல்ல வேண்டும்!

(பெங்களூரூவைச் சேர்ந்த க. சுமதி, திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையம் மற்றும் தென்தமிழ் இணையதளம் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் இடம் பெற்று எழுதி வருகிறார்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்...எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!

news

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை.. டாக்கா கோர்ட் அதிரடி

news

மழை வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை காக்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்!

news

மோமோ விற்பனையில் தினசரி 1 லட்சம் சம்பாதிக்கிறார்களா பெங்களூரு இளைஞர்கள்??

news

நிலவிலிருந்து சாம்பிள் எடுக்கத் திட்டம்.. சந்திரயான் 4 குறித்து இஸ்ரோ தலைவர் முக்கிய தகவல்!

news

என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர்.. தேஜஸ்வி யாதவ் மீது லாலு பிரசாத் மகள் புகார்

news

பீகாரில் புதிய ஆட்சியமைக்கும் பணிகள் விறுவிறுப்பு.. வெற்றி விழாவுக்கு பிரதமர் மோடி வருகிறார்

news

சவுதி அரேபியாவில் கோர விபத்து...42 இந்தியர்கள் பலியான துயரம்

news

வேலின் விழி திறப்பது திருத்தணியில்!

அதிகம் பார்க்கும் செய்திகள்