சென்னை: "இன்னா வீடு சார்.. ஒரு ஊடு.. 2 வாசலா.. ஆமா.. கக்கூஸ் கட்டலையா.. இம்மாம் பெரிய வீட்டைக் கட்டிட்டு கக்கூஸ் கட்டாம விட்டுட்டியே.."
"யோவ்.. மொதல்ல வெளியே போய்யா.. உன்னை யார்யா உள்ள விட்டது"
"இருய்யா போவோம்ல.. மொதல்ல கதவைத் தொறக்கச் சொல்லுய்யா"
கொஞ்ச நேரத்தில் இது பிக் பாஸ் புரோகிராமா அல்லது ஏதாவது கமல்ஹாசன் டபுள் ஆக்ட்டில் நடிக்கும் படத்தின் புரமோவா என்று மெர்சலாகி விட்டனர் ரசிகர்கள்.. அப்படி ஒரு அமர்க்களமான அறிமுகத்தோடு பிக்பாஸ் தமிழ் 7வது சீசன் ஆரம்பமாகியுள்ளது.

வழக்கமாக கமல்ஹாசன்தான் வந்து வீட்டைச் சுற்றிக் காண்பிப்பார். இந்த முறை வீடே இரண்டாக இருப்பதால் 2 கமல் வந்து வீட்டைச் சுற்றிப் பார்க்க வேண்டியதாயிற்று. முதல் கமல் பிக் பாஸ் .. 2வது கமல்தான் கழுத்தில் கர்ச்சீப் கட்டியபடி மெர்சலாக மெட்ராஸ் பாஷை பேசிய நம்ம அண்ணாத்தே கமல்.
சும்மா சொல்லக் கூடாது மாமே.. கொஞ்ச நேரமே வந்தாலும் பிச்சு உதறி விட்டார் நம்மாளு. பல பாஷைகளையும் சட்டை பாக்கெட்டில் வைத்தபடி வலம் வரும் கிங்காச்சே.. இந்த ரோலிலும் கலக்கி விட்டார்.. கமல் பிறரை கலாய்த்துப் பாத்திருப்போம்.. ஆனால் இதில் கமலை கமலே கலாய்த்து கலகப்பாக்கி விட்டார்.
பிக் பாஸ் புரோகிராமில் பிக் பாஸ் கமல் தவிர இந்த மெட்ராஸ் கமலையும் கூட அவ்வப்போது களம் இறக்கினால் செமையாக இருக்கும். பண்ணுவார்களா பார்ப்போம்.
பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் விஜய் போட்ட ஸ்டிரிக்ட் உத்தரவு
இடைத்தேர்தல் களம்: தாராபுரம், மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் 4 நாட்கள் பிரச்சாரம்
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி சனிக்கிழமையில் பெருமாளை வழிபட்டால்.. குடும்பத்தில் வளம் பெருகும்!
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
நமநமக்கும் வாய்கள்.. கலகலக்கும் வயிறுகள்.. புரட்டாசி மாத அலப்பறைகள்!
{{comments.comment}}