பிக்பாஸ் தமிழ் சீசன் 8: ரொம்ப கம்மியான ஓட்டு.. அப்ப இந்த வாரம் வெளியேற போவது இவர் தானா?

Oct 16, 2024,01:22 PM IST

சென்னை : பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இருந்து இரண்டாவது வாரத்தில் வெளியேறப் போகும் போட்டியாளர்கள் யார் என்பதை இப்போதே ஏறக்குறைய பார்வையாளர்கள் கணித்து விட்டார்கள். இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றவர் என்ற அடிப்படையில் இவர் தான் வெளியேறுவார் என ஏறக்குறைய முடிவாகி விட்டது.


விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 8 எதிர்பார்ப்பததை போலவே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி சொன்னது போலவே 24 மணி நேரத்தில் முதல் போட்டியாளராக சாச்சனா வெளியேற்றப்பட்டார். பிறகு மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றார். இவர் எதற்காக வெளியேற்றப்பட்டார், எதற்காக மீண்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது இப்போது வரை பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.


வழக்கமாக முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்காது. ஆனால் பிக்பாசின் இந்த சீசனில் முதல் வாரத்திலேயே ரவீந்தர் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார். இவர் குறைந்த ஓட்டுக்கள் பெற்றதால் தான் வெளியேற்றப்பட்டார் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில், வெளியே வந்த ரவீந்தர், தனக்கும் விஜய் சேதுபதிக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடுகள் மோதல்கள் இருப்பதாக போட்டி ஒன்றில் வெளிப்படையாக சொல்லி அனைவரையும் அதிர வைத்தார். இது போன்ற பல சர்ச்சைகள், குழப்பங்கள் இருந்து கொண்டே இருப்பதால் #BiggBossTamil8 என்ற ஹேஷ்டேக் தொடர்ந்து எக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.




இந்நிலையில் அடுத்ததாக பிக்பாஸ் சீசன் 8 போட்டியில் இருந்து வெளியேற போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் பார்வையாளர்கள் அளித்த ஓட்டுக்களின் எண்ணிக்கையின் படி பார்த்தால் ஜாக்குலின் தான் மிக குறைவான ஓட்டுக்களுடன் கடைசியில் உள்ளார். நிகழ்ச்சியின் துவக்க நாள் முதலே இவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களை மட்டுமல்ல பார்வையாளர்களையும் கடுப்பேற்றி வருகிறது. இவர் எதற்கு எடுத்தாலும் அழுது சீசன் போடுவதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். 


பெண்கள் இருக்கும் பகுதியை ஆண்கள் எட்டி எட்டி பார்ப்பதாக ஜெஃப்ரி உடன் ஜாக்குலின் தொடர்ந்து வாக்குவாதம் செய்து, பெரிய பிரச்சனையாக நீண்ட நேரம் பேசியது, சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட மிகவும் பிடிவாதமாக இவர் நடந்து கொள்வது அனைவரிடமும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. அதனால் இந்த வாரம் ஜாக்குலின் தான் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இது உண்மை தான் என்பது போல் இன்று காலை முதலே  #jacqueline என்ற ஹேஷ்டேக் எக்ஸ் தளத்தில் டிரெண்டாகி வருகிறது. இவரை தொடர்ந்து மக்களிடம் குறைவான ஓட்டுக்களை பெற்றிருப்பது முத்துக்குமரன். அதனால் இவர்கள் இருவரில் யாராவது ஒருவர் தான் வெளியேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தர்மம் வெல்ல வேண்டும்... அதிமுக பொறுப்புகளில் இருந்து நீக்கியதில் மகிழ்ச்சியே: செங்கோட்டையன்!

news

செங்கோட்டையன் நீக்கம்.. எடப்பாடி பழனிச்சாமியின் அதிரடியால் பரபரப்பு.. அடுத்து என்ன நடக்கும்?

news

செங்கோட்டையன் அதிமுகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சியில் இருந்து... தளபதி 2026... விஜய் அரசியல் பிரச்சார சுற்றுப்பயணம் தொடக்கம்!

news

Chennai Metro.. மெட்ரோ ரயில் பயணிகளே.. இந்த முக்கியமான மாற்றத்தை நோட் பண்ணிக்கங்க!

news

பாஜக உட்கட்சி பூசல் தான் அதிமுக.,வில் ஏற்படும் குழப்பத்திற்கு காரணமா?

news

கோபியில் கொதித்த செங்கோட்டையன்.. திண்டுக்கல்லில் கொந்தளித்த இபிஎஸ்... பரபரப்பில் அதிமுக

news

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற நயினார் நாகேந்திரனே காரணம்.. டிடிவி தினகரன் ஆவேசம்

news

மலைக்கோட்டை, பாண்டியன், ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில்கள்.. தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.. நவ. 10 வரை

அதிகம் பார்க்கும் செய்திகள்