கோவை : கோவையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக.,வின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட மாநில பாஜக தலைவரும், கோவை தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை வெளியிட்டார். இதில் 100 வாக்குறுதிகள் கோவை தொகுதிக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு லோக்சபா தொகுதி என மொத்தம் 40 தொகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ், நாம் தமிழர் உள்ளிட்ட முக்கிய கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏற்கனவே வெளியிட்டு விட்ட நிலையில், தற்போது பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. கோவையில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை இதனை வெளியிட்டுள்ளார்.
கோவைக்கான பாஜக.,வின் வாக்குறுதிகள் :
* கோவையில் என்ஐஏ, போதை தடுப்பு பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் உள்ள 6 சட்டசபை உறுப்பினர் அலுவலகங்களிலும் மக்கள் குறை தீர்க்கும் மையங்கள் அமைக்கப்படும்.
* நாடு முழுவதிலும் உள்ள ஆன்மிக தலங்களுக்கு கோவையில் இருந்து 10 ரயில்கள் இயக்கப்படும்.
* கோவையில் காமராஜர் பெயரில் நடமாடும் உணவகங்கள் அமைக்கப்படும்.
* கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகை தணிக்கை செய்யப்படும்.
* பசுமை பரப்பை அதிகரிக்க நடவடிக்கை.
* பல்லடத்தை ஆயத்த ஆடை உற்பத்தி மையமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.
* சவரணம்பட்டியில் பொழுதுபோக்கிற்காக பொதுப்பூங்கா.
* கோவையில் ஐஐஎம் கொண்டு வர நடவடிக்கை
* 250 மக்கள் மருந்தகம் ஒன்றரை ஆண்டுகளில் கொண்டு வரப்படும்.
என்பவை உள்ளிட்ட 100 வாக்குறுதிகளை அண்ணாமலை வெளியிட்டார். இந்த 100 வாக்குறுதிகளும் 500 நாட்களில் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதி அளித்தார். அண்ணாமலை 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாக சொல்லப்படும் விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, தான் 10 மணிக்கு மேல் பேசிய வீடியோ ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள் என்றார்.
இந்தியாவின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு.. 452 வாக்குகள் பெற்று வெற்றி
தவெக தலைவர் விஜய் சுற்றுப் பயணம்.. சனி, ஞாயிற்றை தேர்வு செய்ய இதுதான் காரணமா?
மக்களே அலர்ட்டா இருந்துக்கோங்க..இன்றும், நாளையும் 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு.. எடப்பாடி பழனிச்சாமிக்கு வைக்கப்படும் "செக்" ஆ?
மன அமைதிக்காக ஹரித்வாருக்குக் கிளம்பி.. டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த செங்கோட்டையன்!
Heart Attack: ராத்திரி நேரத்தில்தான் மாரடைப்பு அதிகமாக வருமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?
பீகார் சட்டசபைத் தேர்தல் களம்.. ஓவைசி வைக்கப் போகும் செக்.. இந்த முறை யாருக்கு?
நேபாளத்தில் வெடித்த பெரும் கலவரம்.. பின்வாங்கிய பிரதமர்.. நீங்கிய சமூக வலைதள தடை!
ஜிஎஸ்டி வரிக் குறைப்பால்.. அதிரடியாக விலையைக் குறைத்த ஆடி கார் நிறுவனம்.. 10% குறைந்தது
{{comments.comment}}