விஜய்க்கு என்ன பலம் உள்ளது? அவர் எப்படி தனியாக திமுகவை வீழ்த்துவார்?: வானதி சீனிவாசன் கேள்வி

Nov 10, 2025,05:19 PM IST

சென்னை: விஜய்க்கு என்ன பலம் உள்ளது? அவர் எப்படி தனியாக திமுகவை வீழ்த்துவார் என்று பாஜக எம்.எல்.ஏ. வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன்  பேசுகையில், தமிழகம் எப்போதும் தேசியம் பக்கம் தான் நிற்கும். ஒரு இடத்தில் அனுமதி மறுத்துள்ளதால், ஒவ்வொரு தெருவிலும் நாங்கள் இந்த பாடலை பாட திட்டமிட்டுள்ளோம்.

வந்தே மாதரம் என்ற ஒரு வார்த்தை உங்களை வீட்டுக்கு அனுப்பும் முதல்வரே. தேர்தல் ஆணையத்தின் SIR விவகாரத்தில் மாநில அரசு நாடகத்தை அரங்கேற்றி வருகிறார்கள். இது ஏதோ புதிது கிடையாது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது. பீகார் சட்டமன்ற தேர்தலில் ஒருவர் கூட வாக்கு உரிமை பறித்து விட்டார்கள் என்ற புகார் தெரிவிக்கவில்லை.




நம்முடைய வாக்காளர் பட்டியலை தூய்மையாகவும், நேர்மையாகவும் வைத்திருக்க வேண்டும். தேர்தல் ஆணையம் தான் இந்த பணியை செய்து வருகிறார்கள். ஆனால் SIR செய்யக்கூடிய படிவங்களை திமுகவினர் வாங்கி பூர்த்தி செய்து வருகிறார்கள். பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். திமுக அரசு எவ்வளவு குளறுபடி செய்தாலும் அதை முறியடிப்போம்.


சினிமா பாடல்களை அரசியல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவது என்பது தமிழ்நாட்டிற்கு புதுசு இல்லையே. இங்கு இருக்கும் அரசியலும் சினிமாவும் நெடுங்காலமாக ஒன்றாக பயணித்து கொண்டிருக்கும் சூழலில், ஒரு சினிமா நடிகர் அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் போது எப்படியாவது தன்னுடைய அரசியல் பிரச்சாரத்திற்கு சினிமாவை பயன்படுத்தனும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள். அதனால், இது ஒன்றும் புதுசா அச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.


ஆனால், விஜய் அவர்கள் திமுகவை வீழ்த்த போவேன் என்று பேசுவது, அதுவும் தனியாக வீழ்த்துவேன் என்று பேசுவதில் விஜய்க்கு என்ன பலம் இருக்கிறது. என்ன திட்டம் இருக்கிறது என்பதும் தெரியவில்லை. திமுக மாற்றப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஒன்றாக சேறு என்று சொல்கிறார். அவர் யாருடன் ஒன்றாக சேர உள்ளார் என்பதை விஜய் தான் சொல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 2ம் ஆண்டு நினைவு தினம்.. நினைவிடத்தில் தலைவர்கள் அஞ்சலி

news

CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்

news

4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்

news

பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!

news

ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?

news

பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?

news

14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து

news

SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

அதிகம் பார்க்கும் செய்திகள்