சென்னை: தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன் என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா? என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் முதல்வர் முக ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், செய்தியைப் படித்ததும் மனதில் எழுந்த முதல் கேள்வியே கடந்த 5 நாட்களில் வெளியே தெரிய வந்த வன்கொடுமைகள் 17 எனில், வெளியே சொல்ல பயந்து மறைக்கப்பட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்கள் எவ்வளவு? 17 குற்றங்களில் 12 குற்றங்கள் குழந்தைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் என்பதை உற்று நோக்கும் போது, கடந்த நான்காண்டுகளில் எத்தனை குழந்தைகளின் வாழ்வு சிதைக்கப்பட்டுள்ளது?

"தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று போலியாக சூளுரைக்கும் முதல்வர் ஸ்டாலின்
அவர்களே! நம் வீட்டுப்பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பில்லை என்பது தலைகுனிவு இல்லையா? ஆட்சி முடியும் தருவாயிலாவது விளம்பரத்தை விடுத்து வெளியுலகம் வாருங்கள்! நிர்வாகத்திறனின்மையால் அவதியுறும் பொதுமக்களின் அழுகைக் குரலைக் கேட்டுப் பாருங்கள் என்று தெரிவித்துள்ளார்.
நாளை 7 மாவட்டங்களிலும், நாளைமறுநாள் 12 மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
பொன்முடி, சாமிநாதனுக்கு திமுக துணை பொதுச்செயலர் பதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
மாமல்லபுரத்தில் நாளை சிறப்பு பொதுக்குழு கூட்டம்: தவெக தலைமை அறிவிப்பு
தமிழக மக்களின் நலனை புறந்தள்ளி சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ள திமுக அரசை கண்டிக்கிறேன்: எடப்பாடி பழனிசாமி!
உலகக் கோப்பை கிரிக்கெட்... தொடர் நாயகி விருது வென்ற தீப்தி சர்மாவுக்கு DSP பதவி!
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு... அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
கோவை துயரம் மனிதத்தன்மையற்றது.. கண்டிக்க கடுஞ்சொல் எதுவும் போதாது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோவையில் மாணவியிடம் அத்துமீறி அட்டூழியம் செய்த 3 குற்றவாளிகள்.. சுட்டுப் பிடித்த போலீஸ்
மீனவர்கள் கைது: ஒன்றிய-மாநில அரசுகள் இன்னும் எத்தனை காலத்திற்கு வேடிக்கை பார்க்கப்போகின்றன?: சீமான்
{{comments.comment}}