அசுத்தமான குடிநீரால்... தவிக்கும் தென்மாவட்டங்கள்... பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

May 27, 2025,06:03 PM IST

சென்னை: அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் அரசு முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா?. தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் மாவட்ட மக்கள் அவதி அடைந்து வருகின்றனர் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருநெல்வேலி, தென்காசி மற்றும் விருதுநகர் ஆகிய தென் மாவட்டங்களுக்கு கூட்டு குடிநீர் திட்டங்களின் (cWsss) கீழ் வழங்கப்படும் குடிநீரானது மாசுபட்டிருப்பதாகவும், உறை கிணறுகளுக்கு பதிலாக தாமிரபரணி ஆற்றில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீரால் மக்கள் அவதியுறுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன.


இயற்கையாகவே அசுத்தங்களை வடிகட்டி குடிநீரை சுத்திகரிக்கும் அமைப்பு கொண்ட உறை கிணறுகள், திறந்தவெளி மலம் கழித்தல், கழிவுகளை கொட்டுதல் மட்டுமன்றி ஒப்பந்ததாரர்களின் மெத்தனப்போக்கால் முற்றிலுமாக சேதமடைந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள தகவல், திராவிட மாடல் மாடல் அரசின் நிர்வாகக் குளறுபடிகளைத் தோலுரித்துக் காட்டுகிறது.




ஆனால், குழாய்ப் போக்குவரத்து மூலம்  குடிநீரில் உள்ள கழிவுகள் வடிகட்டப்படுகிறன எனவும், ஆற்றிலிருந்து நேரடியாகக் பெறப்படுவது தற்காலிகமானது தான் எனவும் வாய்க்கு வந்ததைக் கூறி கூறி தங்கள் நிர்வாகத்தின் மீதுள்ள புகார்களை மூடி மறைக்க முயலும் திமுக அரசு. அசுத்தமான குடிநீரைக் குடித்து மக்களின் உயிருக்கும் ஆரோக்கியத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டால் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ளுமா?


கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல்லாவரத்தில் கழிவுநீர் கலந்த குடிநீரால் 3 பேர் உயிரிழந்த சோகத்தையே தமிழகம் இன்னும் மறக்கவில்லை. ஆனால் அத்தகைய துயர விபத்திலிருந்து எந்தப் பாடங்களையும் கற்றுக் கொள்ளாமல் அப்பாவி மக்களின் உயிரை இந்த ஆளும் அறிவாலய அரசு இப்படி அலட்சியப்படுத்துவது ஏன்? கோடை வெயில் வாட்டி வதைக்கையில் சுத்தமான குடிநீருக்கு தட்டுப்பாடு நிலவுவது ஆபத்தானதல்லவா?


உரிமைகளைப் பற்றி மேடைக்கு மேடை பிறருக்கு வகுப்பெடுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர்  ஸ்டாலின் அவர்களுக்கு, குடிநீர் என்பது ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை என்பதும் அதை முறையாக மக்களுக்கு வழங்க வேண்டியது ஆளும் அரசின் கடமை என்பதும் தெரியாதா?


எனவே இதுகுறித்த உயர்மட்ட விசாரணையை உடனடியாகத் துவங்குவதோடு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாட்டையும் சீர் செய்து மக்களுக்கு சுத்தமான குடிநீர் தங்கு தடையின்றி கிடைப்பதையும் உறுதிசெய்ய வேண்டுமென தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கா.. இல்லாட்டி கவலை இல்லை.. ஈஸியா சேர்க்கலாம்

news

நாங்கள் களத்தில் இருக்கின்றோமா இல்லையா என்பதை தேர்தல் முடிவுகள் தீர்ப்பளிக்கும்: செங்கோட்டையன்

news

களத்தில் யார் இருக்கா? விஜய் பேசுறதை எல்லாம் சிரிச்சிட்டு கடந்துடணும்: சீமான் பதில்!

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு

news

உறவுகள் உணர்த்தும் உண்மைகள்!

news

எரியும் ஆழ்மனதில் எண்ணெய்.. சீதா (6)

news

2026 டி20 உலகக் கோப்பை.. சூர்யகுமார் யாதவ் தலைமையில் அணி.. 2 தமிழக வீரர்களுக்கு இடம்

news

சென்னை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து... பல இடங்களில் இணைய மற்றும்108 சேவை பாதிப்பு!

news

செவிலியர்களின் சாபம் திமுக அரசை இனி அரியணை ஏறவிடாது: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்