சென்னை: நொடிக்கு நொடி திரில்லரான கதைக்களத்தில் ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் பிளாக். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறதாம்.
தமிழ் சினிமாவில் திரில்லர் படங்கள் தற்போது தனித்துவம் பெற்று வருகின்றன. அதிலும் பரபரப்பான திரில்லர் கலந்த திரைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மக்கள் இப்படங்களை கொண்டாடியும் வருகின்றனர். அந்த வரிசையில் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் வித்யாசமான திரில்லர் கதையாக பிளாக் படம் உருவாகி வருகிறது. இந்த தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து மாயா, மாநகரம், மான்ஸ்டர், டாணாக்காரன், இறுகப்பற்று போன்ற படங்களை தயாரித்துள்ளது.
இப்படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியிலேயே மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட் கொடுத்தது. அதேபோல் பிளாக் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை கே ஜி பாலசுப்ரமணியன் இயக்கியுள்ளார். சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஜீவா நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். பிளாக் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் முடிந்த நிலையில் தற்போது படம் வெளியீடு குறித்த வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் கே.ஜி பாலசுப்பிரமணி கூறுகையில், ஒரு நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம் நொடிக்கு நொடி திர்லர் ஒரு குறிப்பிட்ட இடம் அனைவரையும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும் அதில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும் இதை பிறரிடம் சொன்னால்.
நம்ப முடியாத வகையிலும் இருக்கும் அப்படிப்பட்ட கதை தான் பிளாக். நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம் யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிக்கொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவே இக்கதைக்கு பொருந்தும் எனக் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}