மும்பை: மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தனது உடல் எடையை வெகுவாகக் குறைத்து ஸ்லிம்மாகி ஆச்சரியப்படுத்தியுள்ளார். 69 வயதில் அவர் கிட்டத்தட்ட 20 கிலோவுக்கும் மேல் எடையைக் குறைத்துக் காட்டி அசத்தியுள்ளார் என்பதுதான் விசேஷமே.
இன்று பலருக்கும் உள்ள ஒரு பெரிய பிரச்சினை உடல் பருமன்தான். நமது வாழ்க்கை முறை மாறி விட்டது, நாம் சாப்பிடும் சாப்பாடும் மாறி விட்டது. இதனால் உடல் பருமன் பிரச்சினையும் வந்து விட்டது. முன்பை விட இப்போதுதான் உடல் பருமன் பிரச்சினை அதிகமாகவும் காணப்படுகிறது. இளம் வயதிலேயே குண்டாக இருப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
உடல் எடையைக் குறைக்க ஒவ்வொருவரும் வாக்கிங், ஜாகிங் என்று விதம் விதமாக முயற்சித்துப் பார்க்கிறார்கள். ஜிம்முக்குப் போவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருகிறது. அதேசமயம், ஜிம்முக்குப் போய் ரீல்ஸ் போடும் கூட்டமும் அதிகமாகி வருவது இன்னொரு தனிக் கதை.
ஒவ்வொரு விதமான எடைக் குறைப்புக்கும் இப்போது தனித் தனியாக பயிற்சிகள் தரும் நிலையும் வந்து விட்டது. குறிப்பாக தொப்பையைக் குறைக்க தனி பயிற்சி அளிக்கப்படுகிறது. கால்களை பலப்படுத்த, கைகளைப் பலப்படுத்த என்று தனித் தனியாக செய்கிறார்கள்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் போனி கபூர் தனது 69வது வயதில் ஒரு மாஜிக்கை செய்துள்ளார். போனி கபூர் நல்ல உடல் பருமனான நபர். ஆனால் இப்போது அவரைப் பார்த்தால் அயர்ந்து போய் விடுவீர்கள். அந்த அளவுக்கு உடல் எடையைக் குறைத்துள்ளார் போனி கபூர்.
கான்ஸ் மற்றும் புக்கெட் பயணங்களின்போது எடுக்கப்பட்ட சில படங்களை போனி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில், எனது புதிய தோற்றத்தைப் பார்த்து நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியுள்ளார். அவரது இந்த வியத்தகு மாற்றத்தைப் பார்த்த பலரும் பாராட்டி வருகிறார்கள்.
போனி கபூர் உடல் எடையைக் குறைக்க ஜிம்முக்குப் போகவில்லையாம், கடுமையான உடற்பயிற்சிகளையும் கூட செய்யவில்லையாம். மாறாக உணவுப் பழக்க வழக்கத்தில் பெரும் மாற்றம் செய்து இதை சாதித்துள்ளாராம். முழுக்க முழுக்க பழங்கள், ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே அவர் சாப்பிட்டு வெயிட்டைக் குறைத்துள்ளார். கிட்டத்தட்ட 26 கிலோ வெயிட்டைக் குறைத்துள்ளார் போனி கபூர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் சாப்பாட்டின் மூலம் உடல் எடையைக் குறைக்க முடியுமா என்ற கேள்வி எழலாம். ஆனால் அது சாத்தியமானதே. குறிப்பாக
60 வயதிற்குப் பிறகும் எடையைக் குறைக்க முடியும். சற்று கால தாமதம் ஆகலாம். ஆனால் அது முற்றிலும் சாத்தியமே. வயதாகும்போது, உடலின் மெட்டபாலிசம் குறைகிறது, தசை எடை குறைகிறது, மேலும் ஹார்மோன் மாற்றங்கள் உணவு செரிமானத்தை பாதிக்கலாம். ஆனால் சரியான பழக்கவழக்கங்களுடன், வயதானவர்களும் கொழுப்பைக் குறைத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.
அதேசமயம், கடுமையான உணவு முறைகள் அல்லது உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தாமல், தரத்திலும், ஒரு ஸ்திரமான முறையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். திடீர் கலோரி குறைப்புகள், க்ராஷ் டயட்டுகள் அல்லது உணவைத் தவிர்ப்பது எதிர்விளைவுகளை ஏற்படுத்தலாம். அதற்குப் பதிலாக, மெதுவான மற்றும் நிலையான மாற்றங்களே நல்ல பலனைத் தரும்.
என்னங்க உங்களுக்கும் 60 பிளஸ் ஆயிருச்சா.. போனி கபூரைப் பார்த்து அவரைப் போலவே முயற்சி பண்ணுங்க.. ஆல் தி பெஸ்ட்!
எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!
கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?
உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?
விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி
கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்
Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்
ருத்ர தாண்டவம் (சிறுகதை)
உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!
{{comments.comment}}