டில்லி : எதிர்க்கட்சிகளின் கடும் அமளி, வெளிநடப்பிற்கு இடையே மத்திய பட்ஜெட்டை லோக்சபாவில் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் உரையை லோக்சபாவில் வாசித்து வருகிறார் நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன். பாஜக அரசின் சாதனை பட்டிலுடன் தன்னுடைய பட்ஜெட் உரையை அவர் துவக்கினார். ஆனால் எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரை துவங்கியதுமே கடும் அமளியில் ஈடுபட துவங்கினர்.
பணவீக்கம், வேலையின்மை, பிரயாக்ராஜ் கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்த சம்பவம் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து, அதற்கு பதிலளித்த பிறகு பட்ஜெட் துறையை துவக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கூச்சலிட துவங்கின.

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே மத்திய பட்ஜெட் உரையை துவங்கி, வாசிக்க துவங்கினார் நிர்மலா சீதாராமன். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளன.
மாற்றத்திற்கான பட்ஜெட் தாக்கலை ஏற்றுக் கொள்ள முடியாமல் தான் எதிர்க்கட்சிகள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளதாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தன்னுடைய பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார்.
தெலுங்குக் கவிதை ஒன்றை மேற்கோள் காட்டி தனது பட்ஜெட் உரையைத் தொடங்கி தற்போது வாசித்து வருகிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
பொங்கல் மட்டுமல்ல இன்று.. இன்னொரு நாளும் இன்று கொண்டாடப்படுகிறது.. அது என்ன?
இந்தியாவை எஃகு கோட்டையாக்கி .. எதிரிகளுக்கு சிம்ம சொப்பனம் ஆகி!
வழிந்தோடும் பொங்கலுடன் இணையும் அனைத்து நற்பலன்கள்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
வைகைத் துயில் கலைந்து வாசலில் போட்ட கோலங்கள்!
வருக வருக.. தை மகளே வருக..!
{{comments.comment}}