மத்திய பட்ஜெட் 2025 : எந்த பொருட்களின் விலை குறைய-உயர வாய்ப்பு.. சர்பிரைஸ் தருவாரா அமைச்சர் நிர்மலா?

Jan 31, 2025,06:53 PM IST

டில்லி : மத்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்கி விட்டது. நாளை காலை 2025-2026ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியைமச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமென்ட்டில் தாக்கல் செய்ய உள்ளார். இதில் வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் வருமா என்பது மாத சம்பளதாரர்களின் எதிர்பார்ப்பாகவும், எந்தெந்த பொருட்களின் விலை குறையும் என்பது நடுத்தர மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.


நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் சாமானிய மற்றும் நடுத்தர மக்களை திருப்திபடுத்தும் விதமாக பல முக்கிய அறிவிப்புகள், விலை குறைப்புகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எப்படி எந்தெந்த பொருட்களின் விலை குறையவும், எந்தெந்த பொருட்களின் விலை அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என்பது குறித்த மக்களின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளலாம்.


விலை குறையும் வாய்ப்புள்ள  பொருட்கள் :




*ஸ்மார்ட்போன், லேப்டாப், ஸ்மார்ட் டிவி போன்ற எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கேட்ஜெட்கள் மீதான இறக்குமதி வரி குறைக்கப்படலாம் என்பதால் அவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது.

* எலக்ட்ரானிக் வாகன பயன்பாட்டினை ஊக்குவிக்கும் விதமாக அவற்றின் மீதான மானியம் அல்லது வரி சலுகை வரலாம் என்பதால் இதன் விலையும் குறையலாம்.

* கேன்சர், அரிய வகை நோய்களுக்கான மருந்துகள் போன்ற உயிர் காக்கும் மருந்துக்களின் மீதான வரி விலக்கு அளிக்கப்படலாம்

* டெக்ஸ்டைல்ஸ் மற்றும் கார்மென்ட்ஸ் - உற்பத்தி செல்வுகளை குறைப்பதற்காக இவற்றின் மீதான ஆதார விலை மற்றும் விலை குறைப்பை கொண்டு வரலாம்.

* வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான எலக்ட்ரானிக் வரிகள் குறைக்கப்பட்டால் வாஷிங் மெஷின், ஏசி, ஃபிரிட்ஜ் ஆகியவற்றின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

* சோலார் பேனல் - இயற்கை சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கு மாறுவதை ஊக்குவிப்பதற்காக சோலார் பேனல்கள், மறுசுழற்சி மூலம் சக்திகளை பயன்படுத்தும் முறைகளுக்கான கருவிகளின் விலைகள் குறையலாம்.

* அனைவருக்கும் வீடு என்ற அரசின் திட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்காக சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வீட்டு கடன்கள் மீது வரிச் சலுகை அல்லது வரி குறைப்பு செய்யப்பட்டால் வீடு கடன்கள் மீதான வரி குறைய வாய்ப்புள்ளது.


விலை அதிகரிக்கும் வாய்ப்புள்ள பொருட்கள் :


* சொகுசு வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவற்றின் மீதான ஜிஎஸ்டி அதிகரிக்கப்படலாம்.

* வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், ஆட்டோமெபைல்கள் மீதான சுங்க வரி உயரலாம்.

* புகையிலை, சிகரெட் போன்ற ஆரோக்கியத்தை பாதிக்கும் பொருட்களின் மீதான விலைகள் உயர்த்தப்படலாம்.

* மது பானங்கள் - மதுபான பயன்பாட்டினை குறைப்பதற்காக அவற்றின் மீதான கலால் வரி உயர்த்தப்படலாம்.

* தங்கம், வெள்ளி - வெளிநாடுகளில் இருந்து இறக்கமதி செய்யப்படும் விலை உயர்ந்த உலோகங்கள் மீதான வரி உயர்த்தப்படலாம்.

* விமான பயணம் - விமான பயன்பாட்டிற்கான எரிபொருட்களின் விலை உயர்த்தப்படலாம் என்பதால் விமான டிக்கெட்களின் விலை உயர்த்தப்படலாம்.

* தொலைத்தொடர்பு நிறுவனங்களில் உள்கட்டமைப்பு விலைகள் உயர்த்தப்படலாம் என்பதால் மொபைல் ரீசார்ஜ் பிளான்கள் மற்றும் இன்டர்நெட் சேவைகளுக்கான விலை உயரலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரதமர் நரேந்திர மோடியின் மதுரை பொதுக்கூட்டம்... திடீர் என சென்னைக்கு மாற்றம்!

news

ஜன.,15 பொங்கல் தினத்தில் ஜனநாயகன் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்: தமிழக அரசு அறிவிப்பு

news

2026 சட்டசபை தேர்தல்... யாருடன் கூட்டணி?... மனம் திறந்த பிரேமலதா விஜயகாந்த்!

news

பழனி முருகன் கோவிலில் போராட்டம்: ஹெச். ராஜா உட்பட 12 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு

news

இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!

news

தமிழர்களின் குரலை அடக்க முடியாது...ஜனநாயகனுக்கு ஆதரவு குரல் கொடுத்த ராகுல் காந்தி

news

தமிழக அரசின் திருவள்ளுவர் தின விருதுகள் அறிவிப்பு

news

புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"

அதிகம் பார்க்கும் செய்திகள்