சென்னை: தங்கம் விலை இன்று மட்டும் இரண்டு முறை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
கடந்த சில நாட்களாக தங்கம் நிலை நிலையற்ற விலையில் இருந்து வருகிறது. இந்த விலை மாற்றத்தினால் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று மட்டும் தங்கம் விலை 2 முறை உயர்ந்துள்ளது. வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று வர்த்தக தொடக்கத்தின் போது சவரனுக்கு ரூ.240 உயர்ந்த தங்கம், வர்த்தகம் முடியும் நேரம் சவரனுக்கு ரூ.880 உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்விற்கு பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலை மாற்றம், டாலருக்கு நிரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு, நாட்டில் நிலவி வரும் போர் பதற்றம் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. இன்று காலையில் 22 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் 8,950க்கும், சவரனுகு்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.71,60க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதே போல் 18 கேரட் தங்கம் கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ,7,365க்கும் சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.58,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்தநிலையில், இன்று பிற்பகல் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது 22 கேரட் தங்கம் விலை கிராமிற்கு ரூ.110 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9060க்கும், சவரனுக்கு ரூ.880ம் உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் 18 கேரட் கிராமிற்கு ரூ.55 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,420க்கும், சவரனுக்கு ரூ.440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.59,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இன்று வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்று ஒரு கிராம் ரூ.111க்கும் , ஒரு கிலோ ரூ.1,11,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Assembly By Election: நாளை மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் 2026: அனைத்து ஏற்பாடுகளும் தயார்
சென்னை பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலக வழக்கு: வழக்கறிஞர் தாக்கல் செய்த மனு வாபஸ்
தென்தமிழ் தலையங்கம்: Celluloid World to St Geroge Fort..கோட்டையைப் பிடிக்கத் துடிக்கும் கோடம்பாக்கம்
குலுக்கி சர்பத்: தூக்கிப் போட்டு குலுக்கி எடுத்து கிளாஸில் ஊற்றிக் குடிச்சா.. ஆஹா என்ன சுகம்!
தலைமை தேர்தல் ஆணையர் விவகாரம்: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
2026-ஆம் ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகளுக்கு விருது!
Evening Snacks Time: டேஸ்ட்டியான சேமியா பால் பாயாசம் செய்து சாப்பிடலாமா?
சென்னையில் புறநகர் மின்சார ரயில் தடம் புரண்டு விபத்து: ரயில் சேவைகள் பாதிப்பு!
எனக்கு ஆசை.. உனக்கு ஆசை.. உன்னை நான் நேசிப்பதும்.. என்னை நீ நேசிப்பதும்!
{{comments.comment}}