ஹீலியம் கேஸை நுகர்ந்து.. சிஏ மாணவர் எடுத்த விபரீத முடிவு.. டெல்லியை உலுக்கிய சம்பவம்

Jul 30, 2025,12:43 PM IST

டெல்லி: டெல்லியைச் சேர்ந்த 25 வயது சிஏ மாணவர் விபரீதமான முறையில் ஹீலியம் கேஸை நுகர்ந்து தனது முடிவைத் தேடிக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் டெல்லியை அதிர வைத்துள்ளது.


டெல்லியில் உள்ள ஒரு கெஸ்ட் ஹவுஸில் இந்த சம்பவம் நடந்துள்ளது. தனது முடிவு குறித்து குறிப்பு ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். தனது சமூக வலைதளப் பக்கத்திலும் இதுகுறித்து அவர் எழுதி வைத்துள்ளார்.


டெல்லியில் இப்படி ஒரு விபரீதமான முறையிலான தற்கொலைச் சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.  கோல் மார்க்கெட் பகுதியில் உள்ள ஏர்பிஎன்பி என்ற விடுதியில்தான் அந்த மாணவர் தங்கியிருந்தார். மரணத்தைத் தேடிக் கொண்ட மாணவரின் பெயர் தீரஜ் கன்சால். தனது அறையை விட்டு அவர் வெளியே வராமல் இருந்ததால் சந்தேகமடைந்த விடுதி காப்பாளர்கல் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் வந்து அறைக் கதவை உடைத்து உள்ளே போய்ப் பார்த்தபோதுதான் விபரீதம் தெரிய வந்தது.




ஆசை படத்தில் வருவது போல முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக் கொண்டு ஹீலியம் காஸ் சிலிண்டரில் உள்ள டியூபை தனது வாய்க்குள் நுழைத்துக் கொண்டு இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார் தீரஜ் கன்சால்.  தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை என்று பேஸ்புக்கில் எழுதி வைத்திருந்தார் தீரஜ். மேலும், எனது வாழ்க்கையில் நான் சந்தித்த ஒவ்வொருவரும் இரக்கமானவர்கள். நல்லவர்கள். எனவே எனது மரணத்துக்காக யாரையும் விசாரணை என்ற பெயரில் போலீஸார் துன்புறுத்த வேண்டாம் என்று அவர் எழுதியிருந்தார். தனது உடல் உறுப்புகளையும் தானமாக கொடுத்து விடுமாறும் தனது பணத்தை ஆதரவற்றோருக்காக செலவிடுமாறும் அவர் கடிதம் எழுதி வைத்துள்ளார்.


தீரஜ் சில காலமாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தை 2002ம் ஆண்டே இறந்து விட்டார். தாயார் மறுமணம் புரிந்து கொண்டு போய் விட்டார். தீரஜை அவரது தாத்தா பாட்டிதான் வளர்த்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?

news

Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?

news

2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!

news

தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்

news

இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை

news

புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு

news

டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்

news

The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு

news

ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்